கைது செய்யப்பட்டுள்ள போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கிடம் NCB அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அவர் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் மங்கை திரைப்படம் முழுக்க முழுக்க போதை பொருள் கடத்தலில் இருந்து வந்த பணத்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது, இதனை தொடர்ந்து ஏழு நாட்கள் கஸ்டடி எடுத்துள்ள என் NCB அதிகாரிகள், தொடர்ந்து துருவி துருவி ஜாபர் சாதிக்கை விசாரித்து வருகிறார்கள்.
அவனிடம் நடத்திய விசாரணையில், அவருடைய நண்பர் சதா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் சதா ராகி மாவில் போதை பொருள் கடத்தியது தெரிய வந்துள்ளது. இந்த கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட குடோன் ஓன்று கன்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சியில் இருந்து இதே போன்று ராகி மாவில் பாக்கெட் போட்டு போதை பொருள் சப்ளை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஜாபர் சாதிக்கை சென்னை அழைத்து வந்த என்சிபி அதிகாரிகள், அங்கே வைத்து விசாரிக்கும் போது பல உண்மைகளை கக்கிக்கியுள்ளான் ஜாபர் சாதிக். அதனடிப்படையில் NCB அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் சென்னையில் பல இடங்களில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கிருந்து போதை பொருளை பொட்டணம் போட்டு வெளிநாடு மற்றும் உள்நாடுகளுக்கு டெலிவரி செய்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பல இடங்களில் சத்துமாவு தயாரிப்பதற்காக வாடகை வீட்டை எடுத்துள்ள இந்த போதை பொருள் கடத்தல் கும்பல், அங்கே வீட்டில் வைத்து சத்து மாவுகளை பாக்கெட் போட்டு அனுப்பி வந்துள்ளார் அந்த வகையில் வாடகைக்கு விடப்பட்ட வீட்டு ஓனர்களும், இந்த போதை பொருள் கடத்தல் கும்பல், சத்துமாவு தான் தயாரித்து வெளியே அனுப்பப்படுகிறார்கள் என்று நம்பி வந்துள்ளனர்.
ஆனால் அது சத்துமாவு இல்லை போதைப் பொருள் பாக்கெட் போட்டு அனுப்பி வந்துள்ளது தெரியவந்துள்ள நிலையில் வாடகைக்கு கொடுத்த வீட்டு ஓனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர்கள் சத்துமாவு என்கின்ற பெயரில் மட்டும் போதைப் பொருள்களை பாக்கெட் போடவில்லை, தேங்காய் பவுடர் தயாரிக்கிறோம் என்றும் வீட்டிலே இருந்து பாக்கெட் போட்டு வந்துள்ளார்கள்.
மேலும் ட்ரை ஃபுட்ஸ் என சொல்லப்படும் உலர் பழங்கள் உள்ளே வைத்தும் போதை பொருட்களை பாக்கெட் போட்டு சப்ளை செய்துதும், புரோட்டின் பவுடர் தயாரிக்கிறோம் என தெரிவித்து அதற்குள்ளையும் போதை பொருள் பவுடர்களை கடத்தி வந்துள்ளார்கள். அந்த வகையில் இவர்கள் வெளிநாடு உள்நாடு என அனைத்து இடங்களுக்கும் உணவு பொருள்கள் மூலமாகவே இவர்கள் கடத்தல் சாம்ராஜ்யத்தை அரங்கேற்றி வந்துள்ளார்கள் என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தற்பொழுது உணவு பொருட்கள் மூலமாக தான் இவர்கள் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த போது அமீர் கொடுத்த பேட்டி ஒன்றே தற்பொழுது இந்த விவகாரத்தில் அமீரை சிக்க வைத்துள்ளது. அமீர் அந்த பேட்டியில், என்னுடன் இணைந்து ஜாபர் சாதிக் மற்றும் தன்னுடைய மற்றொரு நண்பர் மூன்று பேரும் இணைந்து தொடங்கிய கம்பெனியில் இதுவரை இரண்டு முறை பேரிச்சம்பழம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்து இருந்தார்.
அந்த வகையில் உணவு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காகவே தான் ஜாபர் சாதிக் உடன் பட்டனராக கம்பெனி தொடங்கியதாக அமீர் கொடுத்த பேட்டியும், தற்பொழுது உணவு பொருட்கள் மூலமாக தான் மிக பெரிய அளவில் ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளான் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், போதை பொருள் காதலுக்காக தான் அமீர், ஜாபர் சாதிக் இருவரும் உணவு பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் கம்பெனியை தொடங்கினார்களா என்கிற சந்தேகம் வலுத்துள்ளது. அந்த வகையில் NCB அதிகாரிகள் அமீரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருவது பற்றி கமெண்ட் செய்யுங்கள்.