மஜாஜ் செய்ய மறுத்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு… கோவையில் இளைஞர்கள் அட்டூழியம்..

0
Follow on Google News

கோயம்புத்தூர் : பெண்கள் தங்கள் கால்களில் கட்டப்பட்டிருந்த அடிமைச்சங்கிலிகளை உடைத்தெறிந்து சமூகத்தில் ஆணுக்கு நிகராய் வலம் வந்து ஒரு நூற்றாண்டாகியும் இன்னும் அவர்களுக்கு சமூகத்தால் இழைக்கப்படும் இன்னல்கள் ஏராளம். குடும்பத்தை தனது அலுவலகத்தை திறம்பட நியமித்துவரும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் இன்னும் தொடர்கதையாகவே உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் மசாஜ் சென்டர் நடத்தி வருபவர் மினிமோல். கேரளாவை சேர்ந்த இவருக்கு வயது 43. இவரது கணவர் ராஜ். தம்பதியினர் சிங்காநல்லூர் அருகே உள்ள எம்.கே பாளையத்தில் வசித்து வருகின்றனர். இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்துள்ளதாக தெரிகிறது. அப்போது அதே பகுதியை சேர்ந்த இருவர் வீட்டிற்கு வந்துள்ளனர்.

எம்.கே பாளையம் பகுதியை சேர்ந்த கவுசிக் எனும் இளைஞர் தனது நண்பருடன் மினிமோலின் வீட்டிற்குள் சென்றுள்ளார். அங் இருந்த மினிமோலை தங்கள் இருவருக்கும் மசாஜ் செய்ய சொல்லி கூறியுள்ளனர். ஆனால் வீட்டில் வைத்து மசாஜ் செய்யமுடியாது எனவும் மசாஜ் சென்டருக்கு வந்தால் அங்கு செய்துவிடுகிறேன் என கூறியுள்ளதாக தெரிகிறது.

ஆனால் வந்த வாலிபர்கள் வீட்டிலேயே வைத்து மசாஜ் செய் என வற்புறுத்தியுள்ளனர். தொடர்ந்து மினிமோல் மறுக்கவே அது வாக்குவாதத்தில் போய் முடிந்துள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் தாங்கள் மறைத்துவைத்திருந்த அரிவாளால் சராமாரியாக வெட்டியுள்ளனர். இதில் மினிமோலின் தலை கைகளில் பலத்த வெட்டு விழுந்துள்ளது.

மினிமோலின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கமபக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்களை பார்த்த கவுசிக் மற்றும் அவரது கூட்டாளி தப்பியோடியுள்ளனர். ரத்தவெள்ளத்தில் படுகாயமடைந்து சரிந்த மினிமோலை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்த தகவலறிந்த சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.