எனக்கே அட்வைஸ் செய்கிறாயா .. சீனு ராமசாமியை விரட்டியடித்த இளையராஜா.. பிரச்சனைக்கு காரணம் என்ன.?

0
Follow on Google News

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் திரைக்கு வர தயாராக இருக்கும் படம் மாமனிதன். இந்த படத்தில் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை இசையமைக்கின்றனர். தனது தந்தை இளையராஜா உடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்த யுவன் சங்கர் ராஜா, அந்த படத்தை தன்னுடைய சொந்த தயாரிப்பில் எடுக்க தயாரானார், இந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதியை அணுகியுள்ளார் யுவன்.

இருவரும் இணைந்து இசையமைப்பதால் உடனே ஓகே சொன்ன விஜய் சேதுபதி உடனே இந்த கூட்டணியில் சீனு ராமசாமியை இணைத்து கொண்டார். இந்த படம் தொடங்குவதற்கு முன்பே சீனு ராமசாமியிடம் ஒரு சில கண்டிஷன் போட்டு தான் படப்பிடிப்பை தொடங்கியுள்னர். இந்நிலையில் இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய சீனு ராமசாமி. மாமனிதன் படத்தின் பாடல் கம்போஸிங்கின் போது படத்தின் இயக்குநராக என்னை அழைக்கவில்லை.

என் படத்தில் தொடர்ந்து வைரமுத்துதான் பாடல்கள் எழுதியுள்ளார். இதற்கு முன்பு யுவன்சங்கர் ராஜாவும் வைரமுத்துவும் சேர்ந்து கூடத்தான் பாடல் எழுதியுள்ளார்கள். ஆனால் நான் மட்டும் ஏன் நிராகரிக்கப்பட வேண்டும். இது என்ன நியாயம். படத்தின் புரொமோஷனுக்குக் கூட இளையராஜாவும் யுவனும் வரவில்லை. யுவன் மீது எந்தத் தப்பும் இல்லை, அவர் அப்போது எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தார் , மேலும் ஒரு பேட்டியில் இளையராஜாவை தாக்கி பேசிய சீனு ராமசாமி.

எந்த ஒரு படம் வெறும் எபக்ஸ் உடன், எந்த ஒரு படம் பின்னணி இசை இல்லாமல், சுவாரசியமாக இருக்கிறதோ அந்த படம் மட்டும் தான் வெற்றி பெரும், மக்களால் ஈர்க்க படும், மற்ற அனைத்தும் அடிங் பிளவர் என்று, இசை என்பது வெறும் அடிங் பிளவர் தான் என இளையராஜா போன்றவர்கள் அடிங் பிளவர் தான், இயக்குனர் திறமையால் தான் படம் வெற்றி பெரும் அது மக்களை ஈர்க்கும் என மறைமுகமாக பேசியுள்ளார் சீனு ராமசாமி.

மேலும் மாமனிதன் படத்தின் பின்னனி இசையின் மற்றும் காம்போசிங் போது ஏன் இளையராஜா நிராகரித்தார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது தன்னுடைய அணைத்து படங்களிலும் பாடல் எழுதிய வைரமுத்துவை மாமனிதன் படத்தில் பாடல் எழுத வைக்க விருப்பம் தெரிவித்துள்ளார் சீனு ராமசாமி, இதற்கு இளையராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார், இருந்தும் தொடர்ந்து நச்சரித்த சீனு ராமசாமி ஒரு கட்டத்தில் இளையராஜாவுக்கு அட்வைஸ் செய்து வைரமுத்துவை இந்த படத்தில் பாடல் எழுத முயற்சித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் டென்ஷனான இளையராஜா, எனக்கே நீ அட்வைஸ் செய்கிறாயா என, அதன் பின்பு அவரை தன்னுடைய ஸ்டூடியோ பக்கமே அனுமதிக்க வில்லை என்றும், மேலும் மாமனிதன் படத்தின் இசை தொடர்பான எந்த வேலைக்கு இயக்குனரிடம் கருத்து கேட்க வில்லை என கூறப்படுகிறது. ஆகையால் பிரச்சனைக்கு காரணம் சீனு ராமசாமி தான் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிட தக்கது.

ஐஸ்வர்யா ராய் தான் வேண்டும்… அடம் பிடிக்கும் ரஜினிகாந்த் … டென்ஷனில் தயாரிப்பு நிறுவனம் என்ன செய்தது தெரியுமா.?