ஜெயலலிதா ஃபார்முலாவை கையில் எடுக்கும் முதல்வர் ஸ்டாலின்…. கடும் பீதியில் அமைச்சர்கள்..!

0
Follow on Google News

கடந்த 2006 – 2011 திமுக ஆட்சியில் நடந்த திமுக கவுன்சிலர் முதல் திமுக அமைச்சர்கள் வரை செய்த அட்டூழியங்கள் 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக எதிர்கட்சி அந்தஸ்தை கூட இழந்து பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. 2011 சட்டமன்றத் தேர்தலை தொடர்ந்து, அடுத்து 2014ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உட்பட அனைத்து இடங்களிலும் திமுக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியை சந்தித்தது.

இதன் பின்பு பத்து வருட தவ வாழ்க்கைக்கு பின்பு தன்னுடைய கடுமையான போராட்டத்திற்கு, பின்பு 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக அமர்ந்துள்ளார் மு க ஸ்டாலின். பத்து வருடம் தமிழக மக்கள் தங்களை புறக்கணிக்க காரணமாக இருந்தது கடந்த 2006 முதல் 2011 வரை நடந்த திமுக ஆட்சி தான் என்கின்ற பாடத்தை கற்றுக் கொள்ளாத திமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகளின் நடவடிக்கைகள் மீது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது.

திமுக மூத்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் தன்னிடம் மனு கொடுக்க வந்த ஒரு பெண்ணை பேப்பரால் தலையில் அடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, அதேபோன்று தங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் என்று பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டார். அமைச்சர் ராஜகண்ணப்பன் சோபாவில் அமர்ந்திருக்க,அவர் அருகில் திருமாவளவன் பழைய பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தது இது தான் சமூக நீதியா என்கிற சர்ச்சையில் திமுக சிக்கியது.

அதேபோன்று பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தில் பயணிக்கும் தமிழகப் பெண்களே அவமரியாதை செய்யும் வகையில் அமைச்சர் பொன்முடி பேசிய ஓசி பேருந்து விவகாரம் தமிழக பெண்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏற்கனவே திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என பாஜக உட்பட எதிர்க்கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில், இந்து மதம் குறித்து ஆ ராசா பேசியது திமுகவுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியது.

இப்படி தொடர்ந்து திமுக ஆட்சிக்கும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கும் கலங்கம் ஏற்படுத்தும் வகையில் திமுக அமைச்சர்களும் திமுக முக்கிய நிர்வாகிகளும் பேசி வந்த நிலையில், தன்னுடைய ஆதங்கத்தை நடந்து முடிந்த திமுக செயற்குழு கூட்டத்தில் வெளிப்படுத்தினார் மு க ஸ்டாலின். என்னை துன்பப்படுத்துவது போல கழக நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்து கொண்டால் நான் என்ன சொல்வது.? யாரிடம் சொல்வது.?

நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்த புது பிரச்சனையையும் உருவாக்கி விடக்கூடாது என்ற நினைப்போடு தான் நான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னை தூங்க விடாமல் கூட ஆக்கி விடுகிறது இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனையோடு பேசிக்கொண்டிருப்பதை பார்த்த, திமுக மற்றும் முக ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்து வரும் மாற்று கட்சி காரர்கள் கூட கலங்கி முதல்வர் முக.ஸ்டாலின் மீது பரிதாபப்பட்டு வருகிறார்கள்.

ஆனால் வேதனையுடன் பேசிய முதல்வர் மேடையில் இருந்த அமைச்சர்கள் சிரித்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமின்றி, தீ பட்ட காயத்தில் தேள் வந்து கொத்தியது போன்று முதல்வர் முக ஸ்டாலினை மேலும் வேதனையடைய செய்தது போன்று அமைந்தது மேடையில் இருந்த மூத்த அமைச்சர்களின் நடவடிக்கைகள். இந்த நிலையில் கடந்த பத்து வருடம் கடுமையான போராட்டத்திற்கு பின்பு ஆட்சியைப் பிடித்துள்ள முதல்வர் மு க ஸ்டாலின் தற்பொழுது ஜெயலலிதா ஃபார்முலாவை கையில் எடுத்துள்ளது திமுக அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை கட்சி நிர்வாகிகள் அல்லது அமைச்சர்கள் எந்த ஒரு சர்ச்சையில் சிக்கினாலும், உடனே சற்றும் யோசிக்காமல் அமைச்சர் பதவிகளை பறித்துவிடுவார். அதே போன்று கட்சி நிர்வாகிகள் எந்த ஒரு உயர் பதவியில் இருந்தாலும் அடிப்படை உறுப்பினர் இருந்து நீக்கிவிடுவார்.அந்த வகையில் ஒரு கட்டுக்கோப்பாக தன்னுடைய கட்சியை ஒரு வைத்திருந்தவர் ஜெயலலிதா.

இந்நிலையில் இனி வரும் காலங்களில் அமைச்சர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் சர்ச்சையில் சிக்கினால் என்னுடைய நடவடிக்கைகளில் அதிரடியாக இருக்கும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தரப்பில் இருந்து கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், இன்னும் அடுத்த சில மாதங்களில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் வர இருப்பதாக தகவல் ஓன்று வெளியாகியுள்ளது.

தொடர்ந்து ஆட்சிக்கும் தனக்கும் தலைவலியாக இருக்கக்கூடிய அமைச்சர்கள் மாற்றப்படலாம் என்கின்ற முடிவிலும் முதல்வர் மு க ஸ்டாலின் இருப்பதாக கூறப்படும் நிலையில் மூத்த அமைச்சர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர், அதன் வெளிப்பாடு தான் தற்பொழுது ஓசி பேருந்து விவகாரத்தில் சிக்கிய பொன்முடி அவர் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தது என்றும் கூறப்படுகிறது.