பூட்டை உடைத்து கொள்ளை..! சிசிடிவியில் சிக்காமல் இருக்க கொள்ளையன் என்ன செய்தான் தெரியுமா.?

0
Follow on Google News

திருச்சி : தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்றபின்னர் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் நிலையில் மூடியிருந்த கடையை உடைத்து இரண்டரை லட்சம் ரூபாயை கொள்ளையன் ஒருவன் திருடி சென்றிருப்பது திருச்சி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் துறையூர் சாலையில் அமேசான் டெலிவரி பாயிண்ட் குடோன் அமைந்துள்ளது. அமேசானில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு முசிறியில் இருக்கும் இந்த குடோனுக்கு வந்த பிறகே வாடிக்கையாளர்களின் பொருட்கள் அவர்கள் குறிப்பிட்டுள்ள விலாசத்திற்கு டெலிவரி செய்யப்படும்.

இந்நிலையில் சனிக்கிழமை குடோனில் விலையுயர்ந்த டிவி செல்போன் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. வழக்கம்போல இரவு ஊழியர்கள் பொருட்களை சரிப்பார்த்துவிட்டு கடையை மூடிச்சென்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை கடையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு ஷட்டர் முழுவதும் திறந்திருப்பதாக குடோன் மேலாளருக்கு தகவல் சென்றது.

அதிர்ச்சியடைந்த மேலாளர் வந்து கடையை ஆய்வுசெய்ததில் கல்லாவில் பூட்டிவைத்திருந்த இரண்டரைலட்சம் ரொக்கப்பணம் திருபோனதை அறிந்தார். உடனடியாக மேனேஜர் முசிறி காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் சம்பவ இடத்தில் ஆய்வுமேற்கொண்டார்.

சிசிடிவி காட்சிகளை சரிபார்த்தபோது நள்ளிரவு இரண்டுமணியளவில் சிசிடிவி யில் தனது முகம் தெரியாமல் இருக்க, ஹெல்மட் அணிந்த மர்மநபர் ஒருவன் பூட்டை உடைத்து கல்லாவிலிருந்த பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. விலையுயர்ந்த பொருட்களை திருடாமல் பணத்தை மட்டும் திருடிச்சென்றுள்ளான். இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் திருடனை தேடிவருகின்றனர்.