அய்யோயோ பாஜக வேட்பாளர் இவரா.? கூட்டணி கட்சிகளிடம் இருந்து தொகுதியை தட்டி பறித்த திமுக.!

0
Follow on Google News

தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு வந்த மதுரை வடக்கு தொகுதி இம்முறையும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நிமிடத்தில் கூட்டணி கட்சிகளிடம் இருந்து மதுரை வடக்கு தொகுதியை தட்டி பறித்துள்ளது திமுக, இது குறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்ததில் பாஜக போட்டியிடும் தொகுதி பட்டியல் வெளியானதில் மதுரை வடக்கு தொகுதியில் திமுகவை டெல்லி வரை சென்று கதிகலங்க வைத்த பாஜக முக்கிய தலைவர் ஒருவர் போட்டியிடப்போவதாக வந்த தகவலை தொடர்ந்து கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மதுரை வடக்கு தொகுதியில் 2011ஆம் ஆண்டு மற்றும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து திமுக கூட்டணியில் இடப்பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட்டது, ஆனால் தொடர்ந்து அந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று வந்துள்ளனர், இந்நிலையில் இம்முறையும் மதுரை வடக்கு தொகுதி திமுகவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தொகுதி பங்கீடு குறித்த இரண்டு கட்சிகளின் பேச்சுவார்த்தையில் மதுரை வடக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க இரு தரப்பில் இருந்தும் உடன்பாடு ஏற்பட்டது, இந்நிலையில் மதுரை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் போட்டியிடுவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து சில மாற்றங்களை செய்துள்ளது திமுக.

திமுகவுக்கு சொந்தமான முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, இந்த விவகாரத்தை டெல்லி வரை எடுத்து சென்று திமுக தலைமையை கதிகலங்க செய்தவர் பேராசிரியர். சமூகநீதி சாம்பியன் என மார்தட்டி வந்த திமுக, முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் இல்லை என திமுக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது.

மேலும் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதாக எழுந்த விவகாரத்தை பேராசிரியர் கையில் எடுத்ததும், தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினர் முரசொலி மூலபத்திரத்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட வேண்டும் என குரல் ஒலிக்க தொடங்கியது, ஆனால் இதுவரை திமுக தரப்பில் இருந்து எந்த ஒரு ஆதாரமும் காண்பிக்கப்படவில்லை, இந்நிலையில் பாஜக சார்பில் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில்.

இவர் சட்டமன்றத்தில் நுழைந்தால் சர்ச்சைக்குரிய முரசொலி அலுவலகத்தின் மூலபத்திரம் குறித்த விவகாரத்தை கையில் எடுப்பார் என அஞ்சி கூட்டணி கட்சிகளுக்கு அவர் போட்டியிடும் தொகுதியை ஒதுக்கினால், எளிதாக வெற்றி பெற்றுவிடுவார் என்பதால், கூட்டணி கட்சிகளுக்கு செல்ல இருந்த மதுரை வடக்கு தொகுதியை தட்டி பறித்து திமுக இம்முறை போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.