பரபரப்பை ஏற்ப்படுத்திய விஷால்… இனி வாயே திறக்க கூடாது…தரமான சம்பவம் செய்த மேயர் பிரியா…

0
Follow on Google News

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் 45 மணி நேரத்தில் 47 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரலாறு காணாத மழையின் காரணமாக, பெரும்பாலான சாலைகளில் வெள்ள நீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுவதால், போக்குவரத்து தடைபட்டது, மேலும் பல வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்து நிற்கிறது. வீட்டை விட்டு மக்கள் வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கில் சிறப்பு பணிக்கென வரவழைக்கப்பட்டுள்ள தூய்மை பணியாளர்களின் பணியினை ஒருங்கிணைக்கவும், சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு களத்தில் பணிபுரிந்து வரும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களுடன் கூடுதலாகப் பின்வரும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களும் நியமிக்கப்பட்டு இரவு பகல் பாராமல் மீட்பு பனி நடைபெற்று வருகிறது.

தண்ணீரில் சென்னை தத்தளித்து வரும் நிலையில், புயல் கரையைக் கடந்த பிறகு உடன் மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. காரணம் மழை நின்றால் தான் வடிகால் கால்வாய்கள் வழியாக தண்ணீரை வெளியேற்ற முடியும். மலை பொய்த்து கொண்டிருக்கையில் மழைநீரை மோட்டார் வைத்து வெளியேற்றினாலும் வடிகால் பயன் ஏதும் இல்லை. ஆகையால் மழை நின்ற பின்னரே தண்ணீரை வெளியேற்ற முடியும்.

மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள தாம்பரம், வேளச்சேரி பகுதிகளுக்கு 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு சென்றுள்ளது. தேவைக்கு ஏற்ப கூடுதல் வீரர்கள் அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்த சாலைகளில் உடைந்த மரக்கிளைகள், இலைகள், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளன. கழிவுகள் தேங்கியுள்ள சாலைகளில் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, மிக்ஜாம் புயலுக்கு பிறகு சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார், அதில் விஷால் பேசுகையில், அண்ணா நகரில் இருக்கும் என்னுடைய வீட்டில் தண்ணீர் நுழைந்துவிட்டது. அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால் மற்ற இடங்களில் யோசித்துப் பாருங்கள்.

2015-ம் ஆண்டு நடக்கும்போது எல்லோரும் இறங்கி வேலை செய்தோம். முடிந்த அளவுக்கு பொதுமக்களுக்கு சேவை செய்தோம். 8 வருடம் கழித்து அதைவிட மோசமாக நடப்பது கேள்விக்குறியாக உள்ளது. மழைநீர் சேமிப்பு வடிகால் தொடர்பான சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன ஆனது? என கேள்வி எழுப்பிய விஷால்,

என் வீட்டில் இருக்கும் சீனியர் சிட்டிசன்களான எனது அப்பா, அம்மா அச்சத்தில் உள்ளனர். இப்போது எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கியிருப்பது தர்மசங்கடமான, கேவலமான விஷயமாக பார்க்கிறேன். உடனடியாக இதனை சரி செய்ய மாநகராட்சி முன்வர வேண்டும். எதற்காக வரி கட்டுகிறோம் என கேட்க வைத்துவிடாதீர்கள். வந்து உதவுங்கள்” என விஷால் பேசி இருந்த நிலையில், நடிகர் விஷாலுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் சென்னை மேயர் பிரியா.

திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை இந்த பேரிடர் என பதிலடி கொடுத்துள்ள மேயர் பிரியா, வெள்ளம் உங்கள் வீட்டிற்கு மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள். அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும் விஷாலுக்கு தக்க பதிலடி கொடுத்து, குறிப்பாக களத்தில் என்ன செய்து வருகிறோம் என தெரிவித்து தரமான சம்பவம் செய்து இனிமேல் எங்களை குறை சொல்ல வாய் திறப்பயா.? விஷால் வாயை அடைந்துள்ளார் மேயர் பிரியா.