சரத்குமார் பாஜகவில் இணைந்தது இந்த நான்கு தொகுதியில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்… இதோ ரிப்போர்ட்…

0
Follow on Google News

நடிகர் சரத்குமார் 2007-ல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது, இதில் தென்காசியில் சரத்குமாரும், நாங்குநேரியில் எர்ணாவூர் ஏ. நாராயணனும் வெற்றி பெற்றனர். தற்பொழுது தன்னுடைய கட்சியினை பாஜகவுடன் இணைத்து கொண்டார் சரத்குமார்.

பாஜகவில் இணைந்தது ஏன் என சரத்குமார் விளக்கம் கொடுத்தார், அதில் மோடி ஜி அவர்களுக்கு அர்பணித்து சேர்ந்து செயல்பட்டால் என்ன என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இது தொடர்பாக என் மனைவி உடன் பேசினேன். அதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறினார். கட்சி நிர்வாகிகளிடம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது குறித்து பேசிய போது, அதற்கு அவர்கள் ஆதரவும் தெரிவித்தனர் என கூறிய சரத்குமார்.

இந்த இணைப்பு விழாவில் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசுகையில் அற்புதமான மனிதர் நம்முடைய நாட்டாமை அண்ணன். அண்ணனிடம் பேசும்போது மற்ற அரசியல் கட்சி தலைவரை போல் தெரியவில்லை; மற்றவர்கள் பேரம் பேசுவார்கள், எனக்கு என்ன லாபம், உங்களுக்கு என்ன லாபம் என கேட்பார்கள். ஆனால் இவர் ‘நான் கட்சிக்கு வந்தால் நாட்டுக்கும், மோடிக்கும் என்ன லாபம்’ என்றுதான் கேட்டார்.

நள்ளிரவில் என் தொலைபேசியில் அழைத்த அண்ணன் சரத்குமார் , ’நானும் மற்ற அரசியல்வாதியை போல் இருக்க கூடாது. துணிவோடு, அன்போடு நான் முடிவு எடுத்துள்ளேன். காலையில் நான் கட்சி நிர்வாகிகளிடம் இதை சொல்ல வேண்டும். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை மோடி அவர்களுடன் இணைத்து 2024 தேர்தலுக்காக பாடுபடபோகிறேன் என சரத்குமார் தன்னிடம் தெரிவித்ததாக அண்ணாமலை பேசினார்.

இந்நிலையில் நடிகர் சரத்குமார் பாஜகவில் இணைத்தால் தமிழக அரசியல் களத்தில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து தெரிவித்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, தற்போது தன் கட்சியையும் தேசிய கட்சியில் கலக்க வைத்திருக்கிறார். நீண்டு யோசித்து, நிரம்ப சிந்தித்து நல்லதொரு முடிவை எடுத்திருக்கிறார் என்றே என் மனம் நினைக்கிறது. அன்புச் சகோதரருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இது அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் நல்லதொரு வாழ்க்கை அமைவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் என்றே நினைக்கிறேன். இந்த வயதில் இந்த முடிவு அவருடைய அரசியல் முதிர்ச்சியையே காட்டுகிறது. தேர்தல் நேரங்களில் தோழமை கொண்டிருந்த கட்சிக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தவர். திறமை வாய்ந்தவர். நல்லதொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர். அழகாக பேசக்கூடியவர். அவருக்கான வாய்ப்பு சரியாக அமையவில்லை.

ஏற்கனவே அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். சகோதரி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களும் ஆளுநராக இருக்கிறார். தற்போது சரத்குமார் அவர்களும் இணைந்திருப்பது நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அன்பிற்கினிய சகோதரர் சரத்குமார் அவர்கள் தேசிய அரசியலிலும், தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்து, தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, தன்னை நம்பி இத்தனை ஆண்டுகள் உடன் பயணித்தவர்களுக்கும் நல்லதொரு வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனார் தெரிவித்துள்ளார்.