இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் நியுசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. நேற்று தொடங்கிய போட்டியில் நிதானமாக ஆடிவந்த இந்திய அணி இன்று இரண்டாம் நாளில் தனது விக்கெட்களை அடுத்தடுத்து இழந்தது. இதனால் இந்திய அணி 345 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான ஸ்ரேயாஸ் ஐயர் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்துள்ளார். ஜடேஜாவும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். நியுசிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சவுத்தீ 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து தங்கள் முதல் இன்னிங்ஸை ஆடத்தொடங்கிய நியுசிலாந்து அணி தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில் சிறப்பாக விளையாடி வருகிறது.
இன்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வில் யங் 75 ரன்களோடும், டாம் லாதம் 50 ரன்களோடும் களத்தில் உள்ளனர். மொத்தத்தில் பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் இன்று நியுசிலாந்தின் கையே ஓங்கி இருந்துள்ளது.