சிஎஸ்கே வெற்றி ரகசியத்தை மொத்தமா சொல்லிட்டார்… ஆஸி வெற்றிக்குப் பின் கேப்டன் பேச்சு!

0

டி 20 உலகக்கோப்பை தொடர் 2021ன் சாம்பியனாகியுள்ளது ஆஸ்திரேலிய அணி.
கிரிக்கெட் விளையாடும் நாடுகளிலேயே அதிக ஐசிசி கோப்பையை வென்ற நாடாக ஆஸ்திரேலியா இருந்தது. ஆனால் ஒரு டி 20 உலகக்கோப்பை கூட வாங்கியதில்லை என்ற குறை இருந்தது. அதுவும் நேற்று நிறைவேறி விட்டது. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஆஸி அணியின் ஹேசில்வுட் மட்டுமே சிறப்பாக பந்துவீசினார்.

மற்றவர்கள் ரன்களை தாராளமாக வாரி வழங்கினர். இவர் சிஎஸ்கே அணிக்காக கடந்த மாதம்தான் ஐபிஎல் இறுதிப் போட்டியில் இதே மைதானத்தில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச், ஹேசில்வுட் எவ்வாறு கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார் என்பது பற்றி பேசியுள்ளார். கோப்பையை வென்ற பின்னர் ‘ஹேசில்வுட் எங்களிடம் சிஎஸ்கே வெற்றி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அவர் சிஎஸ்கே அணி எவ்வாறு இறுதிப் போட்டியில் திட்டங்களை வகுத்து வெற்றியைப் பெற்றது என்பது பற்றி பல முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். ஐபிஎல் இறுதிப் போட்டியில் அவர் சிறப்பாக செயல்பட்டது எங்களுக்கு இப்போது பயன்பட்டது. எனக் கூறியுள்ளார்