இந்தியா அணியில் தமிழக வீரர்களுக்கு இடமில்லை… தொடர்ந்து தமிழக வீரர்கள் புறக்கணிக்க என்ன காரணம்.?

0
Follow on Google News

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் இந்த தொடரில் இந்தியா தான் அதிக முறை டிராபியை வென்றுள்ளது. இதுவரையில் நடந்த 9 தொடர்களில் இந்தியா 8 முறையும், ஆப்கானிஸ்தான் ஒரு முறையும் டிராபியை கைப்பற்றியுள்ளன. தற்போது 10ஆவது சீசனுக்கான 19வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரானது வரும் டிசம்பர் 8ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருக்கிறது.

இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஜப்பான், நேபாள், ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகிய 8 அணிகள் குரூப் ஏ மற்றும் பி என்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாட உள்ளன. இதில், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டி 1 மற்றும் அரையிறுதிப் போட்டி 2 என்று மோதும். இதில், வெற்றி பெறும் 2 அணிகளும் இறுதிப் போட்டியில் மோதும்.இதற்கான இந்திய யு19 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கான கேப்டனாக பஞ்சாபைச் சேர்ந்த 19 வயது உதய் சஹாரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பிசிசிஐ தரப்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை ஜூனியர் கிரிக்கெட் குழு தேர்ந்தெடுத்துள்ளது.

நடப்பு சாம்பியனான இந்திய அணி ஆசியக் கோப்பைப் போட்டியில் மிகவும் வெற்றிகரமான அணியாக திகழ்கிறது. ஆசியக் கோப்பையை இந்திய அணி 8 முறை வென்றுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்கெட் கீப்பர் பொறுப்பானது, ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆரவெல்லி அவனிஷ் ராவிற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் U19 அணியில் 15 உறுப்பினர்கள் மற்றும் 3 ஸ்டாண்ட் பை வீரர்களும் உள்ளனர்.

தேர்வுக் குழு 4 கூடுதல் ரிசர்வ் வீரர்களையும் பெயரிட்டுள்ளது. ரிசர்வ் வீரர்கள் சுற்றுப்பயணக் குழுவின் ஒரு பகுதியாக இருக்க மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியில் உதய் சஹாரன் (கேப்டன்), சௌமி குமார் பாண்டே (துணைக் கேப்டன்), ஆரவெல்லே அவனீஷ் ராவ் (விக்கெட் கீப்பர்), அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ர மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியன்ஷு மோலியா, முஷீர் கான், முருகன் அபிஷேக், இன்னேஸ் மஹாஜன், தனுஷ் கௌடா, ஆரதயா சுக்லா, ராஜ் லிம்பானி, நமன் திவாரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஸ்டாண்ட்பை பிளேயர்ஸ் ஆக பிரேம் தேவ்கர், அன்ஷ் கோஷை, முகமது அமான் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். மேலும் ரிசர்வ் பிளேயர்ஸ் ஆக திக்விஜய் பாட்டீல், ஜெயந்த் கோயத், பி விக்னேஷ், கிரண் சோர்மலே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும்ஆசிய கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுடன் இந்திய அணி லீக் போட்டிகளில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய அணி தேர்வில் தமிழக வீரர் ஒருவருக்கு கூட இடம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக யு19 இந்திய அணிக்காக தமிழ்நாட்டில் இருந்து வாஷிங்டன் சுந்தர் தேர்வாகினார். அதன்பின் 2022ஆம் ஆண்டு யு19 உலகக்கோப்பையில் மானவ் பரக் தேர்வாகினாலும், ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இதனால் இந்திய அணியில் தமிழக வீரர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற கோஷம் கிளம்பியுள்ளது. இவை அனைத்தும் தமிழக கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே இந்தியா ஆஸ்திரேலியா உலகக்கோப்பை தொடரில் அஸ்வின் இறுதிப் போட்டியில் விளையாடது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக பலரும் தங்களது வாதங்களை எடுத்து வைத்து வருகின்றனர். இதைப் போன்று முன்னர் தினேஷ் கார்த்திக்கும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்