மசூதி, சர்ச்களில் இதை செய்வாரா முதல்வர்.? என்ன பதில் சொல்ல மாட்டீர்கள்.? செய்தியாளர்களை வெளுத்து வாங்கிய மதுரை ஆதீனம்.!

0
Follow on Google News

மதுரை ஆதீனம் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் பேசியதாவது. சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற அறிக்கையை வெளியிட்ட முதல்வர் முக ஸ்டாலினை, நவீன ராமானுஜர் என்று அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளது பற்றி மதுரை ஆதினம் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு அவர் திருநாமம் இடுவாரா.? என பதிலளித்தார்.

மேலும் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்கின்ற அறிவிப்பை நீங்கள் வரவேற்கிறார்களா.? என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மதுரை ஆதீனம், அறிவிப்பு நல்ல அறிவிப்பு தான, ஆனால் மற்ற சமயங்களிலும் இதை ஏற்படுத்துவார்களா.? என கேள்வி எழுப்பிய மதுரை ஆதீனம். நமது சமயத்தில் மட்டும்தான் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். நமது சமயத்தில் தான் அனைவரும் அர்ச்சகராகலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்.

ஆனால் முஸ்லிம்கள் மசூதியில் தமிழ் மொழியில் ஓதுகிறார்களா.? அதேபோன்று சர்ச்சுகளில் ஆங்கிலத்தில்தான் ஓதுகிறார்கள் Oh.! Lord என்று தான் சொல்லுகிறார்கள். அங்கேயும் வேறுபாடுகள் இருக்கின்றது. அங்கேயும் ஒற்றுமைப் படுத்த முடியுமா.? என சரமாரியாக கேள்வி எழுப்பிய மதுரை ஆதீனம். என்ன ஒன்றும் பதில் சொல்ல மாட்டீர்கள் என செய்தியாளர்களை நோக்கி கேள்வி எழுப்பினார் மதுரை ஆதீனம்.

மேலும் ஒரு திட்டத்தை அனைத்து சமயத்திலும் செய்ய வேண்டும். ஒரு சமயத்தில் மட்டும் செய்தால் அது தகராறில் வந்துவிடும். சர்ச் , மசூதிகளிலும் இதுபோன்று செயல்படுத்த வேண்டும் அங்கேயும் வேற்றுமைகள் உள்ளன. அங்கே உள்ள பிரிவுகளை ஒற்றுமை படுத்த முடியுமா.? கிறிஸ்தவர்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன, ரோமன் கத்தோலிக் பெந்தகோஸ், இந்தியன் பெந்தகோஸ் என இதுபோன்று பல பிரிவுகள் உள்ளன,

இவர்களை எல்லாம் ஒன்று சேர்க்க முடியுமா பெந்தகோஸ் கடவுள் உருவம் மற்றவர்கள் என்கிறார்கள், இன்னும் சில கிருஸ்துவர்கள் நமது சமயம் போன்று சாமி வழிபாடு செய்வது, தேர் ஓட்டுவது போன்று வழிபடுகிறார்கள், அவர்களை ஒற்றுமைப்படுத்த முடியுமா.? சமயம் என்றால் அனைத்து சமயங்களையும் அரசு தலையிட வேண்டும் ஒரு சமயத்தில் மட்டும் தலையிடக் கூடாது என்பது எனது கருத்து என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.