அந்த புண்ணியவான் எங்கே போனார்..? கிண்டலடித்த பிஜேபி தலைவர் அண்ணாமலை.!

0
Follow on Google News

கோயம்புத்தூர் : நேற்று கோயம்புத்தூர் வருகை தந்திருந்த தமிழக பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை பிஜேபி தலைமையலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முதல்வர் முக ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதி நடிகர் உதயநிதி மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.

அவர் கூறியதாவது ” ஜனநாயகத்தின் அடிப்படையிலும் சட்டத்திற்குட்பட்டுமே அமலாக்கத்துறையால் ராகுல்காந்தி விசாரிக்கப்பட்டுள்ளார். தங்கள் மீது தவறுகளே இல்லாதது போல காங்கிரசார் நடக்கின்றனர். காங்கிரஸ் என்பதே ஒரு தனிமனித குடும்பத்திற்காக செயல்படும் கட்சி. அவர்கள் தவறிழைத்தார்கள் என்பதை நீதிமன்றமே உறுதிப்படுத்தியுள்ளது.

ஆதாரமில்லாத பொய்யான தகவல்கள் சொல்பவரை வழக்கு போட்டு சிறையில் தள்ளுவோம் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாக கேள்விப்பட்டேன். அவர் முடிந்தால் வழக்குபோடட்டும். உரிய நேரத்தில் உரிய இடத்தில் ஆவணங்களை நான் சமர்ப்பிப்பேன். திமுக அமைச்சர்கள் கையை காலை நாக்கை வெட்டுவோம் என பேசிவருகின்றனர்.

இந்த 2022ன் மிகப்பெரிய நகைசுவையே பிஜேபி தொண்டர்களை பார்த்து செந்தில்பாலாஜி குண்டர்கள் என கூறியது தான். இதை சிறந்த நகைசுவை படமாக மக்கள் ரசிப்பார்கள். முதல்வரின் மகனான உதயநிதி நாங்கள் வெற்றிபெற்றால் நான் படுக்கை தலையணையுடன் கோயம்புத்தூரிலேயே தங்கிவிடுவேன் என கூறினார். அந்த புண்ணியவான் எங்கே சென்றார் என தெரியவில்லை.

முதலமைச்சர் ஒவ்வொரு காவல்நிலையமாக விசிட் அடித்து வருகிறார். ஆனால் லாக்கப் டெத்துக்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான அம்பி மகேஷை சினிமா சூட்டிங் சினிமா ட்ரெய்லர் வெளியீடு நிகழ்ச்சி என்றால் அங்கேதான் பார்க்க முடிகிறது. அந்த நிகழ்ச்சிகள் முடிந்தபின்னரே பள்ளிகள் பக்கமாக செல்கிறார்.

அன்பில் மகேஷ் செய்யாத ஒரே வேலை ஐபிஎல் போட்டிகளுக்கு தமிழில் வர்ணனை அளிக்காதது ஒன்று மட்டும்தான். திமுக அரசு சிதம்பரம் கோவில் தீட்சிதர்களை அதிகாரிகளை வைத்து மிரட்டிப்பார்க்கிறது. அமைச்சர் சேகர்பாபுவும் மிரட்டுகிறார். பிஜேபி அவர்களுக்காக துணை நிற்கும். 2024 ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தவிர அனைத்து கட்சிகளும் எங்கள் பக்கம் நிற்கவேண்டும்” என மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.