புஜபலம் காட்டித் தோள் தட்டியவர்கள் வருமுன்னேயே காணாமற்போனார்.! ரஜினியை நக்கல் செய்த கி.வீரமணி.!

0
Follow on Google News

திராவிட கழக தலைவர் வீரமணி வெளியிட்டுள்ளார் அறிக்கையில், 2020 என்ற இந்தக் கொடுமையான கொடூரமான தொற்று கரோனா (கோவிட் 19) உலக மக்களின் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி வாங்கியது; அத்தகு ஆண்டு முடிவுக்கு வந்து, புதிய ஆண்டு பிறந்த நிலையில், புதிய முழு நம்பிக்கை உள்ளத்தில் ஏற்பட்டு, பழையபடி இயல்பாக நடமாடி, நாளும் பணி செய்யும் நிலைமை என்று திரும்புமோ என்ற ஏக்கமும், நீங்காத அச்சமும் உலகத்தை யோசிக்க வைத்திருக்கும் நிலைதான் யதார்த்தமாக உள்ளது!

நம்பிக்கையை மனிதர்கள் இழக்கவேண்டிய அவசியம் இல்லை! என்றாலும், நம்பிக்கையை மனிதர்கள் இழக்கவேண்டிய அவசியம் இல்லை. மனித அறிவு வளமும், சிந்தனையும், பகுத்தறிவும், ‘நோய் நாடி நோய் முதல் நாடும்’ ஆய்வினைத் தந்துள்ளதால், அந்தந்த நாடுகளில் பல தடுப் பூசிகள் தயராகிப் பயன்பாட்டுக்கும் வந்து விட்டன! புதிய ஆண்டு புதிய நம்பிக்கையை ஊட்டுகிறது. இயற்கையை வென்றெடுத்த மனிதன், அவனது அறிவும், பகுத்தறிவும் தந்த அறிவியல் கண்டுபிடிப்பால், மனிதர்களின் ஆயுள் நாளும் நீண்டு வருவது கண்கூடு. (அதுவே மக்கள் தொகை பெருகியுள்ள சீனா போன்ற பற்பல நாடுகளுக்குப் பொருளாதாரச் சுமை என்றாலும், அவர்களைக் காக்க நிதி ஆதாரம் தேடும் நிலையும் புதிய ‘‘தலை வலி’’யாக உள்ளது.

காரணம் ,அரசு செல வழிக்கும் தொகை வளர்ச்சி – பயனுறு முன் னேற்றம் (Productivity + Growth) ஆகிய வற்றுக்கே செலவழிப்பதிலிருந்து, முதியவர் களைக் காக்கப் பெருந்தொகை செலவழிக்கவும் தேவைப்படுவதுதான் பிரச்சினை) எல்லா பிரச்சினைகளுக்கும் மறுபக்கங்களும் உண்டு. மனித அறிவால் தீர்வு காணப்பட முடியாத வைகளே இருக்க முடியாது என்ற நிலை மறுக்க முடியாத உண்மை; தன்னம்பிக்கையற்ற மூட நம்பிக்கையாளர்கள் வேண்டுமானால் இக்கருத்தை ஒப்புக்கொள்ள மறுக்கக் கூடும். பகுத்தறிவாளர்கள் பிரகடனப்படுத்துகின்றனர்

அறிவியல் தொழில்நுட்பத்தில் நம்பிக்கை யுள்ளவர்களின் தளராத முயற்சி, எந்த நோய் தாக்கினாலும், அதனை எதிர்கொண்டு முறி யடித்து, மனித குலத்தினைப் பாதுகாக்கும் என்பதை பகுத்தறிவாளர்கள் பிரகடனப்படுத்து கின்றனர். பக்தி, ஆன்மிகம், மத நம்பிக்கைகள் எல்லாம் வெறும் சடங்குகளும், சம்பிரதாயங் களுமே தவிர, மற்றவர்களைக் காப்பாற்ற அவை ஒருபோதும் அறிவியல் கைகொடுப்பது போல் கைகொடுக்காது என்பதை மதவாதி களுக்கும், பக்தர்களுக்கும் கரோனா பாடமாகப் புகுத்தியிருந்தாலும், பக்திப் போதை, மதப் போதை ஏறியவர்கள் அவ்வளவு எளிதில் இதை உணருவதோ, உணர்ந்தாலும் ஒப்புக் கொள்ளுவதோ சற்றுக் கடினம்.

பக்திப் போதையைப் பரப்பும் ஊடகங்கள், மற்றொரு காரணம் பக்தி போதையைப் பரப்பும் ஊடகங்கள், தற்போதைய தொலைக் காட்சிகள், அந்தப் போதை குறையும்போது, குடிகாரனுக்கு மேலும் மேலும் ஊற்றி, அவனை எழவிடாமல் வீழ்ந்து கிடக்கவே செய்யும் நிலையைப் போன்றே பக்திப் போதையை ஊட்ட ஊடகங்கள் போட்டிப் போடுகின்றன. அரசுகளுக்கு இப்படி மக்கள் விழிப்புணர்வு இன்றி பக்தி போதையிலும், திருவிழாக்கள் என்ற திசை திருப்பல்களிலும் திளைத் திருந்தால்தான் – அரசுகள் செய்யும் ஜனநாயக பறிமுதல் – உரிமைப் பறித்தல்பற்றிய மாநி லங்களின் கூட்டாட்சி முறை அதிகாரங்களைப் பறிமுதல் செய்யும் வகையில்,ஒற்றை ஆட்சி யாக்கிடும் வேக முயற்சிகளைப்பற்றிய விழிப்புணர்வு வராமல் இருக்கும் வாய்ப்பு ஏற்படும் என்பது ஆளுவோர் எண்ணமாக இருக்கக் கூடும்!

மக்கள் மதவாதிகளாக- நம்பிக்கையில் மூழ்கிவிட்டால்தான் நம் பக்கம் திரும்ப மாட்டார்கள் என்பதை உலகத்தின் யதேச்ச திகாரவாதிகள் – பாசிஸ்டுகள் ஒரு வியூகமாகவே சரித்திரக் காலந்தொட்டு கையாண்டு வருவது தான் வழமையாகும்.தி.மு.க.வில் அதன் ஒப்பற்ற தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கடும் உழைப்பும், சீரிய வியூகமும், கூட்டணிக் கட்சிகளை அர வணைக்கும் எடுத்துக்காட்டான செயற்பாடும் ‘‘திராவிடம் வெல்லும், உலகம் அதைச் சொல்லும்” என்பதை வரலாற்றில் நிலைநாட்டும் ஆண்டாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரை – 2021 ஆம் ஆண்டு அமையட்டும்!

களத்திற்கு வருவோம் என்று புஜபலம் காட்டித் தோள் தட்டியவர்களும் வரு முன் னேயே காணாமற்போன கதை தமிழ்நாட்டின் வரலாற்றின் முதல் திருப்பம் என்பதை எண்ணி, பண பலம், அதிகார பலம், பத்திரிகை பலம், சினிமா பலம் எல்லாற்றையும் முறியடிக்க சூளுரை மேற்கொள்ளுவோம்! திராவிடர் தம் புத்தாண்டு உறுதியாக இது அமையவேண்டும்! அனைவருக்கும் திருப்பம் ஏற்படுத்தும் திராவிடப் புத்தாண்டாக இப்புத்தாண்டு அமையட்டும்! திராவிடம் வெல்லும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.