சிக்கிய வீடியோ…திருமாவளவன் பாராட்டு பெற்ற தீ சட்டி தலையன் மீது போக்சோ சட்டம்… போலீஸ் தேடுதல்… எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

சர்வேட்டு சரண் என்பவர் கானா பாடல் என்கிற பெயரில், சமுதாயத்தை சீரழிக்கும் பாடல்களை பாடி வருகின்றவர், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்த இந்த புள்ளிங்கோ அவரை புகழும் வகையில், ஒரு பாடல் பாடினார் அதில், திருமா வரார் என்றால் சட்டசபை திறக்கணும்…அண்ணனோட பேருக்கு அவர் நூறு வருஷம் இருக்கனும்,புள்ளைன்னு பிறந்த எங்க அண்ணன் திருமா போல பிறக்கணும்.

என திருமாவை புகழ்ந்து பாடல் பாடி திருமாவின் பாராட்டை பெற்ற சர்வேட்டு சரண் என்கிற புள்ளிங்கோ பாடிய மற்றொரு பாடல் ஓன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது, அதில், குச்சி மிட்டாய், குருவி ரொட்டி ரெம்ப பிடிக்கும் சாப்பிட்டால்…. வரல என்று சொல்லதுப்பா சரண் போய் கூப்பிட்டால்..“மஜாவாக மாட்டிக்கிச்சு எனக்கு ஏத்த லடுக்கி (சிறுமி)… பால்வாடி படிக்கும் போதே வாங்கி கொடுத்தேன் பூந்திய, எட்டாவது பாஸாயிட்டு எடுக்க வச்சேன் வாந்தியை…

எதுக்கு தெரியுமா.? நம்மல விட்டுட்டு போவது ..என எட்டாவது படிக்கும் சிறுமியை கர்ப்பமாக்குவேன் என சமுதாயத்தை சீரழிக்கும் வகையில் பாடல் பாடிய இந்த வீடியோ வைரலாக பரவ துவங்கியது. இதனை பார்த்த பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் திருவள்ளூர் எஸ்.பி., வருண் குமார் கவனத்திற்கு வர அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் 16-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வீடியோ திருவள்ளூர் எஸ்.பி., வருண் குமார் கவனத்திற்கு சென்றதை தொடர்ந்து. அந்த பாடலை பாடியவர்கள் விவரங்களை சேகரித்து வருவதாக வருண் குமார் தெரிவித்துள்ளவர், போக்சோ சட்டத்தின் 16-வது பிரிவை கவனத்தில் கொள்ளும்படி மற்றவர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். அச்சட்டப் பிரிவின் படி சிறார்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நடக்க தூண்டுபவர்களையும் போக்சோ சட்டத்தில் கைது செய்யலாம் என வழங்கறிஞர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வித விதமா சோப்பு சிப்பு கண்ணாடி என கானா புகழ் தேனிசை தென்றல் தேவா போன்றவர்கள் மக்கள் ரசிக்கும் படி பாடல் பாடிய இந்த தமிழகத்தில், தீ சட்டி தலையுடன் சமுதாயத்தை சீரழிக்கு வகையில், பாடல் படி அதை கானா படல் என தலைப்பிட்டு சிறுமிகளை ஆபாசமாக சித்தரிப்பது, குறிப்பிட்ட சில சமூகத்தை சீண்டும் வகையில் பாடல் படுவது போன்ற நிகழ்வுகள் குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவு செய்யுங்கள்.

போலீசார் மணிகண்டனை தாக்கியதை நேரில் பார்த்ததாக முதியவர் தகவல்…மணிகண்டன் மரணத்தில் புதிய திருப்பம்……களத்தில் இறங்கிய பாஜக…