முடிந்தது பேச்சுவார்த்தை..பாஜகவில் இணைகிறார்கள் முன்னாள் மூன்று முக்கிய அதிமுக அமைச்சர்கள்.!

1

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கடந்த பத்து வருடங்களாக ஆட்சியில் இருந்த அதிமுக ஆட்சியை திமுகவிடம் பறிகொடுத்துள்ளது, நடந்து முடிந்த தேர்தலுக்கு பின்பு அதிமுகவின் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது, எடப்பாடி பழனிச்சாமி – பன்னீர் செல்வம் இடையே எந்த நேரத்திலும் பூகம்பம் வெடிக்கும் என கூறபடுகிறது, இந்நிலையில் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் தங்கமணி, வேலுமணி இவர்கள் இருவர் ஆதிக்கம் எல்லை மீறி செல்வதாக கூறபடுகிறது.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சில முக்கிய அமைச்சர்களை திட்டமிட்டே எடப்பாடி பழனிசாமி தோல்வி அடைய செய்துள்ளதாக தெரிகிறது, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன் போன்றவர்கள் தோல்விக்கு பின்னால் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாக தோல்வி அடைந்த முன்னாள் அமைச்சர்கள் சக கட்சி நிர்வாகிகளிடம் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் இடையே சமீபத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின் நயினார் நாகேந்திரன் நேரடி டெல்லி தொடர்பில் இருந்து வரும் நிலையில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் என இருவரின் அணியில் இல்லாமல் இருவர் மீதும் கடும் அதிருப்தியில் இருந்து வரும் ராஜேந்திர பாலாஜி தனது அரசியல் எதிர்காலம் கருதி பாஜகவில் இணைவது குறித்த பேசுவரத்தை சுமுகமாக நடந்து முடிந்துள்ளதாக கூறபடுகிறது.

இதே போன்று முன்னாள் அமைசர் மாஃபா பாண்டியராஜன் ஏற்கனவே பாஜகவுடன் நல்ல நட்பில் இருந்து வருகிறார் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தான் ஓபிஎஸ் ஆதரவாளர் என்பதால், எடப்பாடி தரப்பில் இருந்து போதிய ஒத்துழைப்பு தனக்கு வழக்கப்படாததே தன்னுடைய தோல்விக்கு முக்கிய காரணம் என அதிருப்தியில் இருந்த இவரிடம் பாஜக சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஓபிஎஸ் என்ன முடிவு எடுக்கிறார் என்று பார்த்துவிட்டு பாஜகவில் இணைவது குறித்து பேசலாம் என தெரிவித்துவிட்டாராம்.

இதே போன்று சமீபத்தில் ஓபிஎஸை நேரில் சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தன்னுடன் பாஜக முக்கிய தலைவர்கள் அக்கட்சியில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதை தெரிவித்து, தன்னை திட்டமிட்டே எடப்பாடி பழனிசாமி என் தோல்விக்கு சதி வேலை செய்துள்ளார், நீங்கள் எடுக்கும் முடிவை பொறுத்து தான் எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும், விரைவில் நல்ல முடிவாக எடுங்கள் என தனது ஆதரவாளர்களுடன் சென்று பேசிவிட்டு வந்துள்ளார்.

இதே போன்று நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செம்மலைக்கு ராஜசபா உறுப்பினர் பதவி மறுக்கப்படும் பட்சத்தில் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணையும் முடிவில் இருப்பதாக கூறபடுகிறது, இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பாஜகவில் இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டடுள்ள நிலையில், மற்றவர்கள் ஒரு சில காரணத்துக்காக பொறுமையுடன் இருந்து வருகின்றனர் அவர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகாத நிலையில், குறைந்தது ராஜேந்திர பாலாஜி உடன் சேர்த்து மூன்று முக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாஜக பக்கம் செல்வது உறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.

1 COMMENT

Comments are closed.