ஒருவரின் பிறப்பு உரிமையை களங்கப்படுத்துவதா.? அன்புமணிக்கு ஆதரவாக களத்தில் இறங்கி சூர்யாவை கடுமையாக எச்சரித்த காயத்ரி ரகுராம்..

0
Follow on Google News

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில் வன்னிய சமூகத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் அமைந்த சில கட்சிகளால் பெரும் சர்ச்சையானது. இதனால் நடிகர் சூர்யாவுக்கு எதிராக கடும் எதிப்பு கிளம்பிய நிலையில், மாநிலங்கவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்தார், மேலும் நடிகர் சூர்யாவுக்கு சில கேள்விகளை முன்வைத்து கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அன்புமணி ராமதாஸ் கேட்ட கேள்வி ஒன்றுக்கு கூட பதிலளிக்காமல் தான் செய்த தவறை நியாயப்படுத்தி பதிலளித்திருந்தார் நடிகர் சூர்யா. இது மேலும் குறிப்பாக வன்னிய சமூக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ்க்கு ஆதரவாக நடிகர் சூர்யாவுக்கு பதிலடி தரும் விதத்தில் கருத்து தெரிவித்துள்ள பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம், நீங்கள் சினிமா துறையில் பெரிய நடிகர் மற்றும் மரியாதைக்குரிய நடிகர் என்றால் பொய் சொல்வது கருத்து சுதந்திரமாகிவிட்டதா? என்றும்.

மேலும், ஒரு சாதியை குறிவைப்பது கருத்து சுதந்திரமா? நீங்கள் உண்மைக் கதையை கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்குகிறீர்கள், நீங்கள் உண்மைகளை கூறலாம் ஆனால் நீங்கள் ஏன் கூறவில்லை உங்கள் திரைப்படம் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தால், ஏன் திரைப்படத்தில் காலண்டரையும் சில விஷயங்களையும் மாற்ற வேண்டும், ஏனென்றால் அது தவறு. இது தவறு இல்லை என்றால் நீங்கள் விளக்க வேண்டியதில்லை.. அல்லது நீங்கள் மக்களால் கேள்வி கேட்கப்பட மாட்டீர்கள்.

உங்கள் விளம்பரத்திற்காக ஒரு குறிப்பிட்ட சாதியை தூண்டுவது சரியல்ல என கடுமையாக நடிகர் சூர்யாவை எச்சரித்த காயத்ரி ரகுராம், மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்துவது தவறு. ஒருவரின் பிறப்பு உரிமையை களங்கப்படுத்துவது தவறு. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்பது நல்ல எண்ணம். ஆனால் மற்ற சாதி பற்றி பொய் சொல்வது தவறு. மேலும் ’மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது என அன்புமணிக்கு சூர்யா பதில் அளித்துள்ளது குறித்து காயத்ரி ரகுராம் தெரிவித்ததாவது.

அதே அன்பான மக்கள், ரசிகர்கள், திரைப்படங்களை விரும்புபவர்கள், உங்கள் எல்லா திரைப்படங்களையும் பார்த்து பெரும் ஆதரவை வழங்குபவர்கள் தான் உங்கள் பொய்யைப் பற்றி கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் ஜெய் பீம் படத்தைப் பார்த்தார்கள், சாதியைக் குறிவைக்கும் சில பொய்களைத் தவிர அனைத்தையும் விரும்பினார்கள். இது தான் உண்மை. அவர்கள் உங்கள் சாதிக்காக உங்கள் ரசிகர்கள் அல்ல.. உங்கள் திறமைக்கும் நடிப்புக்கும் உங்கள் ரசிகர்கள். உங்களுக்கு நான் உட்பட எல்லா ஜாதியிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். என்பதை நினைவில் கொள்ளவும் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு சுய அறிவு இல்லாமல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், கேரள முதல்வருக்கு நன்றி சொல்கிறார். தமிழக முதல்வர் வடிவேலு போன்று பேசக்கூடாது. – அண்ணாமலை