சீப்பை ஒளித்து விட்டு ..வார்த்தைகளை திரித்து குழப்பத்தை ஏற்படுத்தும் கயவர்கள்.! யாரை குறிப்பிடுகிறார் அண்ணாமலை ஐபிஎஸ் தெரியுமா.?

0
Follow on Google News

பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை  (20/12/2020) கோயம்புத்தூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது அவர் பேசுகையில்,தமிழக மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்திலிருந்து தேர்தல் நேரத்தில் தமிழக மக்களுக்கு 2000 ரூபாய் கொடுப்பதுதான் தமிழக அரசியல்” என பேசியிருந்தார், இந்தக் கருத்தையே திரித்து, “மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் மக்களுக்கே பொங்கல் பரிசு வழங்குகிறது தமிழக அரசு” என்று பேசியதாக சன் டிவி உட்பட பல ஊடகங்கள் பொய் செய்தியை வெளியிட்டது.

இந்நிலையில் இது (21/12/2020) அன்று அண்ணாமலை தனது டிவீட்டர் பக்கத்தில், சில ஊடகங்கள், பொங்கலுக்கு முதலமைச்சர் அவர்கள் மக்களுக்கு ரூபாய் 2500 கொடுக்க இருப்பதை நான் எதிர்ப்பதுபோல, கோயம்புத்தூரில் நான் சொன்னதாக, தவறாக சித்தரித்து கூற முயற்சிக்கிறார்கள், அதை பிரசுரமும் செய்கிறார்கள் . பொங்கலுக்கு கொடுக்கும் தொகையை முதலமைச்சர் அவர்கள் ரூபாய் ஆயிரத்திலிருந்து இரண்டாயிரத்து ஐநூறாக உயர்த்தி இருப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம்.

கொரோனா இருக்கும் இக்காலகட்டத்தில், அரசாங்கம் வழங்கும் இந்த பணம் மக்களுக்கு உதவியாக இருக்கும். தேர்தல் நேரத்தில் , 2000 ரூபாயை ஓட்டுக்காக கொடுப்பதை, அப்படிப்பட்ட அரசியலை பாஜக என்றும் விரும்பாது, அதை என்றும் செய்யாது என்று நான் கோயம்புத்தூரில் பேசியதை தவறாக சித்தரித்திருக்கிறார்கள். நான் கூறிய ஓட்டுக்காக கொடுக்கும் 2000 ரூபாயையும், பொங்கல் பரிசாக அரசாங்கம் வழங்கும் 2500 ரூபாயையும் ஜோடித்து, மக்களை குழப்பவும் பெரும் முயற்சி செய்கின்றன சில ஊடகங்கள். உண்மை என்றும் புரிய வேண்டும், பொய்கள் யாவும் அழிய வேண்டும்.வாழ்க,வளர்க தமிழ்நாடு என அண்ணாமலை விளக்கம் கொடுத்திருந்தார்.

ஆனால் பொய் செய்திகளை திட்டமிட்டு தொடர்ந்து சில விஷமிகளால் பரப்பப்பட்டு வந்தது, இந்நிலையில் இந்தியாவை கிண்டல் செய்யும் விதத்திலும் சீனாவுக்கு ஆதரவாக சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடுமா.? என கிண்டல் செய்து கருத்து தெரிவித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய நெறியாளர் சீப்பு புகழ் செந்தில் தனது டிவீட்டர் பக்கத்தில், 2000 ரூபாயை நம்பி 5 ஆண்டுகளை தமிழக மக்கள் அடகு வைத்து விடக் கூடாது. எங்களுக்கு வாக்களிக்கவில்லை எனில் காரின் டயரில் விழுந்து கும்பிடுபவர்கள்தான் அரசியல்வாதியாக வருவர். சொன்னது யார் தெரியுமா ? திரு. அண்ணாமலை பாஜக என பொய்யான செய்தியை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து அண்ணாமலை ஐபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தின் ஒரு கட்சியை சார்ந்த ஊடகங்கள், நான் பேசிய அனைத்து விஷயங்களையும் திரித்து, சமூக தளத்திலே, நமது கூட்டணிக்குள்ளே குழப்பம் ஏற்படுத்த, சத்தியத்திற்கு புறம்பான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை, ஜனநாயகத்தில், ஊடகத்தின் முக்கியமான வேலை என்று ஒன்று இருக்கிறது.

அது, மக்களுக்கு உண்மையை உள்ளவாறு எடுத்துரைத்து, சரியான நேரத்தில் அதை கொண்டு சேர்ப்பது, தமிழக ஊடகங்கள் இதுவரை அதை சரியாக செய்து வந்தன. இப்பொழுதான் அவர்களில் சிலர், சில காலமாக இப்படி தர்மத்திற்கு எதிராக வேலை செய்து வருகிறார்கள். அதனால் நாளை முதல், நான் கலந்து கொள்ளும் அனைத்து ஊடக நிகழ்ச்சிகளுமே, என்னுடைய முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் நேரடி ஒளிபரப்பில் வரும்.

நம்முடைய நண்பர்களும், உண்மையை மற்றுமே விரும்பும் தமிழர்கள் அனைவரும் பொது மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் நான் தரும் பேட்டிகளை என்னுடைய முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் நேரடி ஒளிபரப்பிலோ, பதிவிலோ பார்த்து கொள்ளலாம். சீப்பை ஒளித்து விட்டு கல்யாணத்தை நிறுத்த கயவர்கள் சிலர் முயற்சிப்பதை போல, வார்த்தைகளை திரித்து கூட்டணிக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்த முயல்பவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். சத்தியம் வெல்லும். என தெரிவித்துள்ளார். அண்ணாமலை தனது அறிக்கையில் நெறியாளர் செந்தில் பெயரை குறிப்பிடாமல் சீப்பை மேற்கோள்கட்டி மறைமுகமாக அவரை கிண்டல் செய்யும் விதத்தில் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.