உளவுத்துறை கொடுத்து அதிர்ச்சி ரிபோர்ட்.! தேர்தலுக்கு முன்பே சசிகலாவை அதிமுகவில் இணைக்க எடப்பாடி, பன்னீர் செல்வம் முடிவு.!

0
Follow on Google News

தேர்தலுக்கு முன்பே சசிகலாவை அதிமுகவில் இணைத்து, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுத்த தீவிர ஏற்பாடு நடைபெற்று வருகிறது, இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று சேலத்தில் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது, முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், முதல்வர் நாற்காலி அருகில் சென்று அமர முடியாமல் சிறை சென்றவர் சசிகலா.

நான்கு வருட சிறை தண்டனை முடித்து வெளியில் வந்ததும் அதிமுகவில் மிக பெரிய சலசலப்பு ஏற்படும் என எதிர்க்கட்சிகள் காத்திருக்க, ஆனால் சிறையில் இருந்து வெளியில் வந்த சசிகலா நான் என்றும் பதவிக்கோ படத்திற்கோ ஆசைப்பட்டதில்லை. தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி மீண்டும் அமையப் பிரார்த்திப்பேன். அதிமுக ஆட்சி அமைய அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். நான் அரசியலை விட்டே ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை வெளியிட்டு எதிர்க்கட்சி மற்றும் அமமுக கட்சினரை அதிர்ச்சி அடைய செய்தார்.

இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து வெளியில் வருவதர்க்கு சில நாட்களுக்கு முன்பு இருந்தே அவரை அதிமுகவில் இணைக்க ஒ.பன்னீர் செல்வம் முயற்சி செய்து வந்தார், பன்னீர் செல்வம் முயற்சிக்கு மத்திய பாஜகவும் உதவி செய்ததாக கூறபடுகிறது ,ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு உடன் படவில்லை, இதனை தொடர்ந்து இந்த முயற்சி தடைபெற்றது.இதன் பின்பு சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் முயற்சியை தற்காலிகமாக கைவிடப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தி வந்தனர் பன்னீர் மற்றும் எடப்பாடி இருவரும்.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தன்னிடம் உள்ள உளவுத்துறை மூலம் தேர்தல் நிலவரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க எடப்பாடி மற்றும் பன்னீர் இருவரும் இனைந்து உத்தரவிட்டுள்ளார், இதன் அடிப்படையில், உளவுத்துறை சமர்ப்பித்த ரிப்போர்ட்டில், தற்போது உள்ள கள நிலவரப்படி திமுகவை விட 10 தொகுதி அதிகமாக பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க அதிமுகவுக்கு வாய்ப்புகள் உள்ளது, அதே நிலையில் சுமார் 24 தொகுதிகள் வரை கடும் இழுபறியில் இருந்து வருவதை சுட்டி கட்டியுள்ள உளவுத்துறை ரிப்போர்ட்.

அமமுக வேட்பாளர்கள் அதிமுக வாக்குகளை பிரிப்பது ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது, சசிகலா ஆதரவு அதிமுகவுக்கு இருக்கும் என்றால் இழுபறியில் உள்ள 24 தொகுதிகளில் சுமார் 14 தொகுதிகள் வரை அதிமுக எளிதாக வெற்றி பெற்றுவிடும் என உளவுத்துறை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது, இந்நிலையில் இது குறித்து நேற்று சேலத்தில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருவரும் ஆலோசித்துள்ளார், அதில் மீண்டும் சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்தும் பேசியுள்ளனர்.

தேர்தலுக்கு குறுகிய காலம் மட்டுமே உள்ளதால் தேர்தலுக்கு ஒரு சில தினங்களுக்கு முன்பு அதிமுகவை ஆதரித்து சசிகலா பிரசாரம் செய்ய வைக்கலாம், அல்லது அதிமுகவை ஆதரித்து அறிக்கை வெளியிட்டால் போதுமா.? என ஆலோசனை நடத்திய இவர்கள், சசிகலா என்ன முடிவில் இருக்கிறார் என்பதை அறிந்து அதற்கு ஏற்றார் போல் முடிவு செய்வோம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி மகனின் நெருங்கிய நண்பரான ஜெயா டிவி இயக்குனர் விவேக் ஜெயராமனிடம் இதுகுறித்து சசிகலாவிடம் பேச எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வம் இருவரிடம் இருந்து தகவல் சென்றதாக கூறப்படுகிறது.