அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் புழல் சிறையில் அடைக்கப்பட்டு, தொடர்ந்து அவருடைய ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. அமலாக்க துறை செந்தில்பாலாஜியை கைது செய்து அழைத்து சென்ற போது திடீர் நெஞ்சுவலி காரணமாக செந்தில்பாலாஜி துடிக்க, உடனே மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி உடல்நிலை காரணம் காட்டி கைதில் இருந்து தப்பித்து விடுவார் என பலரும் எதிர்பார்க்க, அமலாக்க துறை விடுவதாக இல்லை, தங்கள் மொத்த வித்தைகளையும் கையாண்டு, செந்தில் பாலாஜியை புழல் சிறையில் அடைக்க வழிவகை செய்தது அமலாக்க துறை.இந்நிலையில் செந்தில் பாலாஜி தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் சிறையில் இருந்து வரும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் பல முறை செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை ரத்து செய்துள்ளது.
இந்நிலையில் உச்சநீதி மன்றத்தில் ஜாமின் மனுவை செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்ய இருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றம் சென்றாலும் ஜாமின் கிடைப்பதற்கு எள்ளளவும் வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி ஜாமின் மனு நிராகரிக்க படுவதற்கு சில முக்கிய காரணங்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
முதலாவதாக, செந்தில் பாலாஜி உடல்நிலை மோசமாக உள்ளது அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது என்கிற காரணத்தை சுட்டி காட்டி கேட்கப்பட்ட ஜாமின் மனு தள்ளுப்படி செய்யப்பட்டது. அதாவது ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் உடல் நிலை சரியில்லாமல் இருத்தால் மட்டுமே அவருக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்புள்ளது, ஆனால் செந்தில் பாலாஜி சமீபத்தில் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருடைய உடல் சீராக உள்ளது என்பதை உறுதி செய்து விட்டதால், உடல் நிலையை காரணம் காட்டி ஜாமினில் வெளி வர முயற்சித்தது தோல்வியை தழுவியுள்ளது என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.
இரண்டாவது செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் மூன்று மாதங்களாக தலைமறைவாக இருந்து வருவதால், செந்தில் பாலாஜி ஜாமின் பெற்று வெளியில் சென்றால் சாட்சியங்கள் அழைக்கப்படலாம் என்பதால் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது, அந்த வகையில் செந்தில் பாலாஜி தலைமறைவாக இருந்து வருவது கடைசியில் செந்தில் பாலாஜி ஜாமினுக்கே ஆப்பு வைப்பது போன்று அமைத்து விட்டது.
மேலும் ஜாமின் மறுக்கப்பட்டதற்கு வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்ட போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை சுட்டி கட்டப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு முக்கியமான காரணமாக குற்றவாளியாக இருந்து கொண்டு அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதால் வெளியில் விட்டால் அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்கள் அளிக்கப்படும் என்பதால் ஜாமின் மனு மறுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், செந்தில் பாலாஜியின் இலாக்கா இல்லாத அமைச்சர் பதவியே அவருடைய ஜாமின்னுக்கு எதிராக இருந்து வருவதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு வாய்ப்பு தான் உள்ளது, அதாவது தான் குற்ற மற்றவர் என்று நிரூபிக்க வேண்டும், ஆனால் அரசு வேலை வாங்கி தருவதாக தாங்கள் பணம் கொடுத்து ஏமாற்ற பட்டோம் என பலரும் அமலாக்க துறை அதிகாரிகளிடம் சாட்சி சொல்லியுள்ளதால் அதற்கான வாய்ப்பும் மிக குறைவாகவே உள்ளதால், உச்ச நீதிமன்றம் சென்றாலும் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைப்பதில் வாய்ப்பில்லை என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.