அதிமுகவின் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்பொழுது எடப்பாடி பழனிசாமி பக்கம், முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், ஆர்.பி உதயகுமார் , கே, பி முனுசாமி உட்பட ஒரு சிலரை தவிர்த்து அதிமுகவில் இருக்கும் மற்ற அனைவரும் செங்கோட்டைன் பின்னால் இருந்து, எடப்பாடிக்கு எதிரான செங்கோட்டையன் செய்து வரும் புரட்சிக்கு ஆதரவு அளித்து வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
எடப்பாடிக்கு பக்க பலமாக இருந்து வந்த SP வேலுமணி மற்றும் தங்கமணி இருவருமே செங்கோட்டையன் பின்னால் சென்று விட்டார்களே என பலரும் ஆச்சரியப்பட்டு வரும் நிலையில், செங்கோட்டையனை பின்னால் இருந்து அண்ணா நாங்க இருக்கோம், நீங்க எடப்பாடி க்கு எதிராக அடித்து விளையாடுங்க என எடப்பாடிக்கு எதிரான செங்கோட்டையன் ஆட்டத்தை தொடங்கி வைத்ததே SP வேலுமணி மற்றும் தங்கமணி இருவரும் தான் என்கிறது அதிமுக வட்டாரங்கள்.

இந்நிலையில் எடப்பாடி அரசியல் வாழ்கை முடிவுக்கு வரும் நிலையில், தன்னுடைய மகனை கடந்த மாதம் டெல்லிக்கு அனுப்பிய எடப்பாடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கு வைத்து, அப்பா நீங்கள் என்ன சொன்னாலும் கேட்க தயாராக இருக்கிறார், என்பதை தெரிவித்து அமித்ஷா உதவியை நாடி டெல்லிக்கு மகனை அனுப்பி வைத்தார் எடப்பாடி, ஆனால் சுமார் 10 நாட்களுக்கு மேல் டெல்லியில் தங்கி இருந்த எடப்பாடி மகனுக்கு அமித்ஷாவை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை.
இரண்டு வாரம் காத்திருந்து அமித்சாவை சந்திக்க முடியாமல் டெல்லியில் இருந்து திரும்பினார் எடப்பாடி மகன். இந்நிலையில் எடப்பாடி மகன் டெல்லியில் அமித்சாவை சந்திக்க வாய்ப்பு கேட்டு காத்திருந்த அதே காலகட்டத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து வந்தார் SP வேலுமணி. மேலும் சமீபத்தில் கோவை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவை, SP வேலுமணி மற்றும் தங்கமணி இருவரும் சந்தித்தது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் தற்பொழுது மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவை ரகசியமாக சசிகலா சந்தித்தாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தற்பொழுது எடப்பாடி க்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டுள்ள செங்கோட்டையன் சசிகலாவின் ஆதரவாளர், மேலும் SP வேலுமணி மற்றும் தங்கமணி இருவருமே சசிகலாவுக்கு ஆதரவாக இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மீண்டும் சசிகலா அதிமுக உள்ளே வருவதற்கான வேலைகள் மிக தீவிரமாக நடந்து வருவதாகவும்.
அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவில் இருந்து வெளியேற்றுவதற்கான வேலைகளும் மிக தீவிரமாக நடந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர், அதன் காரணமாகவே சசிகலா – அமித்ஷா ரகசிய சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் சசிகலா – அமித்சா ரகசிய சந்திப்புக்கு பின்பு, அதிமுகவில் உள்ள மாவட்ட செயலாளர்கள் யாரெல்லாம் மாற்றம் செய்யவேண்டும் என்கிற பட்டியலையும் சசிகலா தயார் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில் எடப்பாடி அரசியல் அஸ்திவானமாகி வரும் நிலையில், அதிமுகவின் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சசிகலா இருக்கும் போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று, தங்கள் ஆதரவை தெரிவித்து, சின்னமா நாங்க உங்க பக்கம் தான் இருக்கோம், எடப்பாடி ஆள் என்று எங்கள் பதவிக்கு வெட்டு வைத்து விடாதீங்க என் முன்னெச்சரிக்கையாக பதவியை தக்க வைக்கும் வேளைகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் எடப்பாடி அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டு, சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தொடர்வதற்காக வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், சசிகலா கட்சியை மட்டும் பார்த்து கொண்டு, தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும், சசிகலாவுக்கு அடுத்த இடத்தில் செங்கோட்டையனை முன்னிறுத்தி, வரும் 2026 சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்து தேர்தலை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.