போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பகிரங்க மிரட்டல்..! தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதாகிறாரா வன்னியரசு.?

0
Follow on Google News

தமிழக டிஜிபி யாக நேர்மையான அதிகாரி என மக்கள் மத்தியில் பெயர் பெற்ற சைலேந்திரபாபு IPS அவர்கள் பொறுப்பேற்ற பின்பு தமிழகத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு சில அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருவது தமிழக காவல்துறைக்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது, சமீபத்தில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை நேரில் சந்தித்தார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு IPS.

இந்த சந்திப்பு நடந்த அடுத்த சில மணி நேரங்களில் தமிழக காவல் துறையின் அதிரடி நடவடிக்கையில் குற்ற பின்னணியில் உள்ள 500க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர், அடுத்த இரண்டு தினங்களில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் காவல் துறையின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வரும் நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் மட்டும் காவல்துறையினரால் குறி வைக்க படுவதாகவும்.

மேலும் தலித் விரோத போக்கை காவல்துறை கையாண்டு வருவதாக காவல்துறைக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதத்தில் காவல்துறையின் சட்டம் ஒழுங்கு நடவடிக்கையை கூட தனது அரசியல் லாபத்துக்காக அதை ஒரு சாதிக்கு எதிராக திசை திருப்ப முயற்சியில் ஈடுபட்டு வந்தார் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த வன்னியரசு. மேலும் சமீபத்தில் சேலம் அருகே காவல்துறை அனுமதியின்றி விடுதலை சிறுத்தை கட்சி கொடியை ஏற்ற முயன்ற அந்த கட்சியின் தொண்டர்களை காவல்துறை தடுத்து நிறுத்த முயன்றனர்.

அப்போது காவல் துறைக்கு எதிராக வன்முறையில் அங்கே இருந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் ஈடுபட்டதை தொடர்ந்து காவல் துறை அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார், தொடர்ந்து சேலம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட விசிகவினரை விடுதலை செய்ய திருமாவளவன் பல முயற்சி செய்தும் முடியவில்லை என அவரே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தொடர்ந்து காவல்துறைக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்து வந்த வன்னியரசு, காவல்துறை உயர் அதிகாரிகளை மிரட்டும் வகையில் சமீபத்தில் அவர் பேசியதாவது, தற்போது புதியதாக வந்துள்ள விரைப்பாக நின்று கொண்டிருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் கடந்த கால வரலாறு தெரியாது என நினைக்கிறேன், நாங்க அடங்க மறு, அத்து மீறு, திமிரி எழு , திருப்பி அடி என்கிற முழக்கத்தை முன் வைத்து தான் அரசியல் களத்தில் நிற்கிறோம்.

எங்களுடைய இலக்கு விடுதலை பயணம் தான், விடுதலை பயணத்துக்கு எதெல்லாம் தடையாக இருக்கின்றதோ அதையெல்லாம் அடித்து உடைத்துவிட்டு தான் வெளியேறுவோம் என காவல் துறையை மிரட்டும் போக்கில் வன்னியரசு பேசியுள்ளது சட்டம் ஒழுங்கு பிரட்சனையை உருவாக்கும் விதத்தில் அமைந்திருந்தது. இந்நிலையில் இவரின் எந்த பேச்சுக்கு நடவடிக்கை எடுக்கும் விதத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வன்னியரசு கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து காவல் துறையை கண்டித்து சேலம் மற்றும் மதுரையில் திருமாவளவன் தலைமையில் போராட்டம் நடைபெற இருந்த நிலையில், நேற்று அந்த போராட்டம் ரத்து செய்யப்படும் என திருமாவளவன் அறிவிப்புக்கு பின்னணியில் காவல்துறை வலையில் வன்னியரசு வசமா சிக்கியிருப்பதும், விடுதலை சிறுத்தை கட்சி அடக்கி வசிக்கவில்லை என்றால் வன்னியரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படலாம் என தகவல் தான் என கூறபடுகிறது குறிப்பிடத்தக்கது.