PTR உங்களை சிக்கலில் மாட்டி விட்டுவிடுவார்..! முதல்வரிடம் சென்ற எச்சரிக்கை தகவலால் பரபரப்பு..!

0
Follow on Google News

பத்து ஆண்டுகள் கடும் போராட்டத்துக்கு பின்பு தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ளது திமுக. 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் எதிர்கட்சி அந்தஸ்த்தை கூட இழந்து படுதோல்வி அடைந்த திமுக, பின் திமுக தலைவராக முக ஸ்டாலின் பொறுப்பேற்று கொண்ட பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதி தவிர மற்ற அணைத்து தொகுதிகளில் வெற்றி பெற்றது, சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதல்வராக அரியணையில் அமர்ந்துள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்.

தேர்தலுக்கு முன் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்த திமுக தலைமை, தேர்தலுக்கு பின்பு இதற்கு முன்பு திமுக ஆட்சியின் போது முதல்வராக இருந்த கருணாநிதி போன்று மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டது போன்று தற்போது உள்ள முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்படுமா, அல்லது தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சியாக இருந்த போது மத்திய அரசை கடுமையாக எதிர்த்தது போன்று தொடருமா என பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.

ஆனால் தேர்தலுக்கு பின்பு தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட பின்பு மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்வதை கைவிட்டு விட்டார், பெரும்பாலான அமைச்சர்கள் அவர்கள் துறைசார்ந்த பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர், ஆனால் நிதியமைச்சராக இருக்க கூடிய பழனிவேல் தியகராஜன் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி திமுக மற்றும் அதன் தலைமையை எதாவது ஒரு சிக்கலில் சிக்க வைத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நிதி அமைச்சராக இருக்க கூடிய தியாகராஜன் சமீபத்தில் ஜாக்கி வாசுதேவ் குறித்து கருத்து தெரிவித்து அந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து இனிமேல் ஜாக்கி வாசுதேவ் குறித்து எதுவும் பேச போவதில்லை என அவர் வெளியிட்ட அறிவிப்பின் பின்னணியில் என்ன நடத்தது என்பது இதுவரை மர்மமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது அவர் மத்திய அரசை தொடர்ந்து ஒன்றிய அரசு என அழைத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் போன்ற அமைச்சர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி வருவது குறித்தும், இதில் வேறு ஏதேனும் சதி இருக்கிறதா என்ன தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என புகார் எழுந்துள்ள நிலையில், திமுக பின்னனியில் இருக்கும் சில பிரிவினைவாத கும்பல் தூண்டுதலின் பேரில் தான் மத்திய அரசை, ஒன்றிய அரசு என குறிப்பிடுவதாக தமிழக பாஜக முக்கிய தலைவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் முதல்வர் முக ஸ்டாலினுக்கு ஒரு தகவல் சென்றுள்ளது அதில் திமுக அரசு இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வருவது போன்று ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டு வருகிறது, அதற்கு வலு சேர்க்கும் விதத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியகராஜன் பேச்சுக்கள் அமைத்துள்ளது, திமுக அரசையும் , உங்களையும் பெரும் சிக்கலில் மாட்டிவிட பழனிவேல் தியாகராஜன் பேச்சுக்கு அமைந்துவிடும் என எச்சரிக்கை தகவல் சென்றதாக கூறப்படுகிறது.