கூட்டணிக்கு திமுகவில் துண்டை போடும் ராமதாஸ்..தர்மபுரியில் அன்புமணிக்கு சீட்… செந்தில் குமார் எம்பிக்கு கல்தா.!

0
Follow on Google News

பாமக பொது கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், என் மூச்சு உள்ள போதே கோட்டையில் அன்புமணி உட்கார வேண்டும். திமுக, அதிமுகவுக்கு நாம் பலநேரங்களில் உதவியிருக்கிறோம். ஒரு கட்சி நம்மை களங்கப்படுத்தியது. இன்னொரு கட்சி நம்மை கொஞ்சம் கவுரப்படுத்தியது. இனி நமது தலைமையில் தான் கூட்டணி. வேறு யாருடனும் கூட்டணி இனி கிடையாது. கடைசி நேரத்தில் முடிவு மாறும் நிலை இனி இருக்காது; இதற்கு கட்சியினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என பேசினார்.

இந்நிலையில் ராமதாஸ் இந்த பேச்சு அதிமுக கூட்டணியில் விலகி கட்சியை வலுப்படுத்துவதற்கான திட்டம் என கூறபடுகிறது, கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக தனது கோட்டை என வர்ணிக்கப்படும் தர்மபுரி தொகுதி உட்பட போட்டியிட்ட அணைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் வடமாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மண்ணை கவ்வியது பாமக.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின் திமுகவை விமர்சனம் செய்வதை குறைத்து கொண்ட பாமக, அதிமுக உடன் இடைவேளையை பின்பற்றி வந்தது. இதனை தொடர்ந்து நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலிலும் மண்ணை கவ்விய பாமக. அடுத்து வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை தற்போது தொடங்கியுள்ளது. மேலும் தமிழகத்தில் இனி சாதி அரசியல் எடுபடாது என்பதை நடந்து முடிந்த சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் உணர்த்தியுள்ளது.

இதனை தொடர்ந்து காடுவெட்டி குரு மறைவுக்கு பின் பாமக சந்தித்த தேர்தல் அனைத்திலும் மண்ணை கவ்வி வரும் நிலையில். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்கவில்லை என்றால் பாமக என்கிற கட்சி அத்துடன் முடிவுக்கு வந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 2024 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் திட்டத்தில் பாமக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில்.

இனி நமது தலைமையில் தான் கூட்டணி. வேறு யாருடனும் கூட்டணி இனி கிடையாது. கடைசி நேரத்தில் முடிவு மாறும் நிலை இனி இருக்காது என தெரிவித்து தற்போது இருக்கும் தொண்டர்களை வைத்து கட்சியை மேலும் வலுப்படுத்தி நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் திட்டம் பாமகவுக்கு இருக்கலாம் என கூறபடுகிறது, அதன் ஆரம்பம் தான் தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேற காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுகவுடன் பாமக கூட்டணி அமைக்கும் பட்சத்தில் தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவதில் எந்த மாற்றமும் இருக்காது, அதே வேலையில் தற்போது திமுக எம்பியாக இருக்கும் செந்திகுமார்க்கு மீண்டும் தர்மபுரி தொகுதியில் போட்டியிட வாய்ப்புகள் அமையாது என்றும், மேலும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுட்டிகுட்டப்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக தோல்வியை தழுவியது, திமுக தலைமை அந்த தொகுதி எம்பி செந்திகுமார் மீது அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படும் நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் செந்திகுமார்க்கு திமுக தலைமை கல்தா கொடுக்க பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.