மதுரை வருகிறார் பிரதமர் மோடி… தென் தமிழக பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம்…

0
Follow on Google News

ஏப்ரல்2ல் மதுரை வருகிறார் பிரதமர் மோடி. தென்மாவட்ட பாஜக அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து மதுரையில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் பிரதமர் மோடி. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அதிமுகவுடன் கூட்டணியில் பாஜக போட்டி இடுகிறது.

தமிழக பாஜக தேசிய பொறுப்பாளர் சி.டி. ரவி செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி தமிழகம் வன: நடைபெற இருக்கும் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள பிரதமர்கள் மோடி வரும் 30ம் தேதி தாராபுரம் வருகிறார். தொடர்ந்து ஏப்., 2ம் தேதி இதனைத் தொடர்ந்து மதுரை மற்றும் நாகர்கோவிலில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

மதுரையில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், தமிழக முதல்வர், துணை முதல்வர் கூட்டணி கட்சி தலைவர்கள் என தென் தமிழக பாஜக + கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக மதுரையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். மதுரை பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த பிரம்மாண்டமாக நடத்த உள்ளனர். இதற்கான இடம் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.