நான் சொன்னதை நீங்க செய்யல, தோல்வி அடைந்தால் நான் பொறுப்பில்லை.! ஸ்டாலினிடம் லேட்டஸ்ட் ரிப்போர்ட்டை கொடுத்த பிரசாந்த் கிஷோர்.!

0
Follow on Google News

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சிகள், மற்றும் நிறுவனங்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டு அடுத்தது யார் ஆட்சி அமைக்க வாய்ப்புகள் அதிகம் என கருத்து கணிப்பு வெளியிட்டு வருகின்றனர், இதில் சில ஊடகங்கள் திமுகவுக்கு சாதகமாக கருத்து கணிப்பு வெளியிட்டாலும், பெரும்பாலான ஊடகங்கள் அதிமுகவுக்கு சாதகமாக கருத்து கணிப்பு வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் பெரும் குழப்பத்தில் இருந்த திமுக தலைவர் முக ஸ்டாலின், திமுக தேர்தல் வியூக வகுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரசாந்த் கிஷோரை தொடர்பு கொண்டு தமிழக தேர்தல் நிலவரம் குறித்து கேட்டதாக கூறப்படுகிறது, இதில் இரண்டு தினத்தில் ஆய்வு செய்வதாக பிரசாந்து கிஷோர் தெரிவித்துள்ளார், இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தேர்தல் களத்தில் உள்ள ஐ-பேக் நிறுவன ஊழியர்களுக்கு ஒரு தகவல் சென்றுள்ளது.

அதில் இரண்டு நாட்கள் நேரம் எடுத்து கொள்ளுங்கள், நீங்கள் இருக்கும் தொகுதியில் தீவிர ஆய்வு செய்து யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டதாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து தீவிர ஆய்வுக்கு பின் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் பிரசாந்த் கிஷோருக்கு தொகுதியின் முழு நிலவரத்தை அனுப்பி வைத்துள்ளனர், தனக்கு வந்த இறுதி அறிக்கையை தீவிர மறு ஆய்வுக்கு பின் திமுக தலைவர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார் பிரசாந்த் கிஷோர்.

அதில் அதிமுக கூட்டணி 123, திமுக கூட்டணி 109, அமமுக 1, மநீம 1, இடம் பெற்றிருந்தது, இந்த கருத்து கணிப்பை பார்த்து அதிர்ச்சியடைந்த ஸ்டாலின், உடனே பிரசாந்த் கிஷோரை தொடர்பு கொண்டு கடந்த இரண்டு மதத்துக்கு முன்பு கூட திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என நீங்கள் தெரிவித்தீர்கள், தற்போது என்ன ஆச்சு, என தேர்தல் களம் மாறியுள்ளது என ஸ்டாலின் கேட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம் கொடுத்துள்ளார், அதில் எங்கள் நிறுவனம் தீவிர ஆய்வுக்கு பின் உங்களிடம் ஒவ்வொரு தொகுதியிலும் திமுக வேட்பாளராக யாரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு உள்ளது என்கிற முழு விவரத்தையும் உங்களுக்கு தெரிவித்திருந்தோம், ஆனால் நாங்கள் கொடுத்த பட்டியலில் இடப்பெற்றிருந்த பெரும்பாலான பெயர்கள் நீங்கள் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை, பெரும்பாலான தொகுதியில் திமுக தோல்விக்கு வேட்பளார் தேர்வு தான் என தெரிவித்த பிரசாந்த் கிஷோர்.

மேலும் உங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அறிவுறுத்தல்படி நீங்க வேட்பாளரை நியமித்துள்ளது அந்தந்த மாவட்ட தலைவர்கள் திமுகவின் உட்கட்சி அரசியலில் தற்போது வெற்றி பெற்று இருக்கலாம், ஆனால் தேர்தலில் திமுகவுக்கு அது மிக பெரிய சரிவை தான் ஏற்படுத்தி வருகிறது, இதற்கு மேல் தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானால் இருக்கலாம், நாங்கள் சொன்னதை நீங்கள் செய்யவில்லை, பிறகு எங்களை குறை சொல்ல கூடாது என பிரசாந்த் கிசோர் சொன்ன தகவல் ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.