எடப்பாடி பழனிச்சாமி பசும்பொன்னில் நடைபெற இருக்கும் தேவர் குருபூஜையை கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது முதல், முக்குலத்தோர் சமூகத்தினர் மற்றும் முக்குலத்தோர் சமூக அமைப்பின் முக்கிய தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். குறிப்பிட்ட சில முக்கிய தலைவர்கள் பகிரங்கமாவே எடப்பாடி பழனிச்சாமி பசும்பொன் நினைவிடத்திற்கு வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனால் எடப்பாடி பழனிச்சாமி பசும்பொன் வருவாரா.? என்கிற சந்தேகம் எழுந்து வந்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் எடப்பாடி பழனிசாமி பசும்பொன் நினைவிடம் வந்து தேவர் குருபூஜையை கலந்து கொண்டார், இந்நிலையில் பசும்பொன் செல்லும் வழியில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் வகையில் வழியெங்கும் வைக்கப்பட்ட வரவேற்பு பலகைகளை சேதப்படுத்தி தூக்கி எறியப்பட்ட நிகழ்வும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பசும்பொன் செல்லும் வழியில் தேவர் குருபூஜை சென்ற மக்கள் ஆங்காங்ககே துரோகி எடப்பாடி ஒழிக என கோஷமிட்ட சென்ற வீடியோ காட்சிகளும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, இந்நிலையில் பசும்பொன் நினைவிடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததும், அங்கே குருபூஜையில் கலந்து கொள்ள வந்த மக்கள் எடப்பாடி மீது இருந்த கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தில்,
நம்பிக்கை துரோகி எடப்பாடி ஒழிக, சசிகலா காலில் விழுந்த எடப்பாடி ஒழிக, தேர்தலுக்காக பசும்பொன் வந்துள்ள எடப்பாடி ஒழிக, என கோஷமிட்டவர்கள் வெளியேறு வெளியேறு எடப்பாடியே வெளியேறு என பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் வந்த எடப்பாடிக்கு எதிராக அங்கிருந்த மக்கள் கோசம் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி பசும்பொன் வருவதற்கு முக்குலத்தோர் சமூக அமைப்பின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அந்த எதிர்ப்பையும் மீறி பசும்பொன் வந்த எடப்பாடிக்கு எதிராக அங்கிருந்த மக்கள் எழுப்பிய கோஷம் விண்ணை பிளந்தது, எடப்பாடி பழனிசாமிக்கு இந்த அவமானம் தேவை தானா என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தற்பொழுது எடப்பாடிக்கு எதிராக பசும்பொன்னில் மக்கள் எழுப்பிய கோஷம் வைரலாகி வருவது குறிப்பிடதக்கது.