டிடி செய்த அட்ராசிட்டி… மேடையிலே கடுப்பான கார்த்திக்..

0
Follow on Google News

நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகவும் கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்ச்சியை விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களான டிடியும், மகப ஆனந்தும் தொகுத்து வழங்கினர். ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் தொகுப்பாளினி டிடி செய்த செயலால் நடிகர் கார்த்தி கடும் அப்செட்டில் உள்ளார்.

அப்படி டிடி என்ன செய்தார் என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம். 2004 ஆம் ஆண்டு பருத்தி வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் கார்த்தி வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். இவர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், பையா, சிறுத்தை, மெட்ராஸ், தீரம் அதிகாரம் ஒன்று, கைதி என அத்துனை படங்களும் வரிசையாக ஹிட் அடித்துள்ளது. வெவ்வேறு இயக்குனர்களின் கூட்டணியில் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் கார்த்தி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு டிராக்கை அமைத்து உச்சத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் வெளியான விருமன் படத்தையடுத்து, இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம்தான் ஜப்பான். இந்தப்படம் கார்த்திக்கு ரொம்ப ஸ்பெஷல் ஆன படமாகும். ஏனெனில், இது அவருடைய 25வது திரைப்படமாகும். இதனாலேயே அவர் தனது 25வது படம் நல்ல கதைகளத்தோடு இருக்க வேண்டும் என்று, பொறுமையாக கதைகேட்டு ஜப்பான் படத்திற்கு ஓகே சொல்லியிருக்கிறார்.

இயக்குனர் ராஜுமுருகன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை அணு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், அடுத்த மாதம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆவதற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று வெகுவிமர்சையாக நடந்து முடிந்துள்ளது. இதில் சத்யராஜ், ஆர்யா, விஷால், ஜெயம்ரவி, தமன்னா, போன்ற திரையுலக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஜப்பான் திரைப்படத்தின் டிரெய்லரையும் சூர்யாதான் வெளியிட்டார். இப்படி தனது 25 ஆவது படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஆசை ஆசையாக பல முக்கிய பிரபலங்களை அழைத்து வந்து, படத்தை ப்ரோமாட் செய்ய எண்ணிய கார்த்தியின் பிளானில் டிடியால் ஒரு சொதப்பல் நடந்து விட்டதாகவும், இதனால் கார்த்தி அப்செட் ஆனதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதாவது, எப்பவுமே ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்தவரை நிகழ்ச்சியின் கடைசியில்தான் பேச அழைப்பார்கள். ஆனால் டிடி நிகழ்ச்சியின் இடையிலேயே சூர்யாவை பேச அழைத்திருக்கிறார். இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமான சூர்யா ரசிகர்கள், சூர்யா பேசி முடித்தவுடன் அங்கிருந்து கிளம்பிவிட்டார்கலாம்.

படத்தின் நாயகன் கார்த்தி மேடைக்கு பேச வரும் போது பாதி ரசிகர்கள்தான் இருந்தார்களாம். இதனால் கார்த்தி கொஞ்சம் அப்செட் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது. டிடிக்கு இருக்குற அனுபவத்துக்கு ஒரு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடிச்சு கொடுக்க முடியும். ஆனா, இந்த முறை ஏன் இப்படி சொதப்பி வச்சாங்கான்னு தெரியல..