விஜய் ரசிகர்களின் போர்ஜரி வேலை… விஜய்யே வைத்த ஆப்பு…

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த 19 தேதி உலகம் முழுவதும் வெளியாகி வெற்றி நடைபோடுகிறது. இப்படம் வெளியாகி பத்து நாட்களுக்கும் மேலான நிலையில், ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்துக் கொண்டிருக்கிறது. எனவே, படக்குழுவினர் படத்தின் வெற்றிவிழாவை நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே, பாதுகாப்பு காரணங்கள் கருதி படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. ஆனால், இப்போது சில கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் காவல்துறை வெற்றிவிழா கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் வெற்றி விழாவுக்கான ஏற்பாடுகள் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு மீண்டும் லியோ படத்தில் இணைந்த விஜய்-லோகேஷ் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. சொல்லப்போனால், இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு லியோ படத்தின் மீது ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

சில கலவையான விமர்சனங்கள் இப்படத்தின் மீது இருந்தாலும் கூட மக்களின் பேராதரவு காரணமாக லியோ வெற்றிநடை போட்டு வருகிறது. முதல் நாளே உலகளவில் ரூ. 148 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்த லியோ ஒரு வாரத்தில் உலகளவில் ரூ. 461 கோடி வரை வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இப்போது படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கூட இன்னும் ஆகவில்லை.

ஆனால், லியோ ஐநூறு கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும், அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால், லியோ வசூல் வேட்டை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் படத்தில் முதலீடு செய்த தயாரிப்பு நிறுவனமும் உற்சாகத்தில் உள்ளது. எனவே, இந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாட ஒரு வெற்றிவிழா நடத்த வேண்டும் என்று படக்குழுவும் தயாரிப்பு நிறுவனமும் முடிவு செய்தது.

ஆகவே, அதற்கான பணிகளிலும் தீவிரமாக வேலை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, ரசிகர்களுக்கு அதிகப்படியான பாஸ்கள் கொடுக்க முடியாத காரணத்தால் லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்வதாக, முன்பு தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்திருந்தார். இப்போது, வெற்றிவிழாவில் எந்த குளறுபடியும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக படக்குழு ஒரு முடிவெடுத்துள்ளது.

அதாவது, வெற்றி விழாக்கான டிக்கெட்கள், ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும். இதனால் ரசிகர்கள் போலி டிக்கெட்டுகளை வாங்கி ஏமாறுவதைத் தடுக்க முடியும் என்று திட்டமிட்டுள்ளது. படக்குழுவின் இந்த அதிரடியான முடிவால், ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். குறிப்பாக ரசிகர் மன்றங்கள் மூலமாக டிக்கட் கொடுக்கும் போது, ரசிகர் மன்ற நிர்வாகிகள் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து விடுகிறார்கள்.

மேலும் கலர் ஜெராக்ஸ் எடுத்து ரசிகர்கள் விற்பனை செய்வது, விஜய் ரசிகர்களின் போர்ஜரி வேலைகளை தடுக்கவே இப்படி ஆன்லைன்னில் லியோ படத்தின் வெற்றி விழாவின் டிக்கெட் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.