கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளை ஒதுக்கியது திமுக, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக 2021 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, திமுக கூட்டணியில் இருந்த எந்த கட்சியும் வெளியேறிவிட கூடாது என்பதை கருத்தில் கொண்டு, நமது இலக்கு பாராளுமன்றம் கிடையாது சட்டமன்ற தான் என்பதால், நாடாளுமன்ற தேர்தலில் பாதிக்கு பாதி தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது திமுக.
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய 9 தொகுதியில் தேனி நாடாளுமன்ற தொகுதி தவிர்த்து, மீதம் 8 தொகுதியில் திமுக தயவில் வெற்றி பெற்றது காங்கிரஸ், அடுத்து நடந்த 2021 சட்டசபை தேர்தலில் மிக குறைந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது திமுக, அதுவுமே அழுது புரண்டு திமுகவிடம் வாங்கியது காங்கிரஸ். இந்நிலையில் கரூர் நாடாளுமன்ற எம்பியாக இருந்து வரும் ஜோதிமணி தொடர்ந்து திமுகவுக்கு எதிராக அந்த தொகுதியில் அரசியல் செய்து வந்தது திமுக தலைமையை தர்மசங்கடத்தில் உள்ளாக்கியது.
குறிப்பாக சட்டசபை தேர்தலுக்கு பின்பு செந்தில் பாலாஜி அமைச்சரான பின்பு, அவருக்கும் ஜோதிமணிக்கு இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது, என்னை மதிக்க மாட்டேன் என்கிறார்கள், நான் இந்த தொகுதி எம்பி என அடிக்கடி சன்டை சச்சரவில் ஜோதிமணி ஈடுபட்டு வந்தது, திமுக தலைமைக்கு ஜோதிமணி மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அடுத்து வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி நீ போட்டியிடுகிறாய் என்று பார்ப்போம் என பொறுமையாக இருந்து வந்த திமுக தற்பொழுது ஜோதிமணியை, இந்த எம்பி பதவியை வைத்துக்கொண்டு தானே என்ன மதிக்கவில்லை என்று கூச்சலிட்டு கொண்டிருந்தாய், இனி உனக்கு சீட்டே இல்லை என்கிற முடிவில் திமுக தலைமை உறுதியாக இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதி திமுக ஒதுக்கிய நிலையில், இம்முறை 6 தொகுதி மட்டுமே ஒதுக்கும் முடிவில் திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகவும், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஒதுக்கிய 9 தொகுதியில் 3 தொகுதியில் திமுக கைவசப்படுத்த உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதில் முதன்மையாக இருப்பது ஜோதிமணி போட்டியிட்ட கரூர் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் திமுக போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.
அதற்கு அடுத்ததாக மாணிக்கம் தாகூர் எம்பியாக இருக்கும் விருதுநகர் தொகுதியை திமுக கைவசப்படுத்தி வைகோ மகன் வையாபுரிக்கு வழங்க இருக்கிறது, வைகோ தன்னுடைய மகனுக்கு விருதுநகர் தொகுதியை கேட்டு வருகிறார், மேலும் ஒரே ஒரு தொகுதி மட்டும் வைகோ கேட்டு வருவதால் அதையும் கொடுக்கமால் தட்டி கழித்தால் வைகோ டென்ஷனாகி விடுவார் என்பதை உணர்ந்து காங்கிரேசிடம் இருக்கும் விருதுநகர் தொகுதியை கைப்பற்றி வைகோ மகன் வையாபுரிக்கு திமுக வழங்க இருப்பதால், மாணிக்கம் தாகூருக்கு இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
மேலும் திருச்சியில் தற்பொழுது திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கே.என் நேரு என இரண்டு அமைச்சர்களும் இம்முறை திருச்சி தொகுதியில் திமுக நேரடையாக போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருவதால், திருச்சி தொகுதியும் காங்கிரசிடம் இருந்து திமுக கைவசம் செல்கிறது என கூறப்படுகிறது.