வெற்றிவேல் யாத்திரை வெற்றி பெற தேனியில் “நிகம்பல யாகம்”.! இரண்டாம் கட்ட யாத்திரைக்கான பணிகள் தீவிரம்.!

0
Follow on Google News

தமிழக பாஜக சார்பில் தமிழக முழுவதும் வெற்றி வேல் யாத்திரை நடைபெரும் என அறிவிக்கப்பட்டு அதற்கான அணைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றன, நவம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் யாத்திரை நடை பெற திட்டமிட்டிருந்த நிலையில், யாத்திரை தொடங்கும் முதல் நாள் தமிழக அரசு பாஜக நடத்தும் வெற்றி வேல் யாத்திரைக்கு கொரோனா தொற்றை காரணம் காட்டி தடை விதித்தது.

இந்நிலையில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் பெருமளவில் மக்களை திரட்டி கூட்டம் நடத்த அனுமதி உண்டு, டாஸ்மாக் கடையில் கூட்டம் கூட அனுமதி உண்டு ஆனால் பாஜகவின் வெற்றி வேல் யாத்திரைக்கு தடையா.? என கேள்வி எழுப்பிய தமிழக பாஜக திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடைபெறும் என அறிவித்து, அதன்படி நவம்பர் 6ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தனது இல்லத்தில் இருந்து வேல் யாத்திரையை தொடங்கினார்.

ஆனால் தொடர்ந்து வேல் யாத்திரையை நிறைவு செய்ய விடாமல் வழிமறித்து கைது செய்து வருகிறது தமிழக அரசு, எத்தனை முறை கைது செய்தாலும் திட்டமிட்டபடி வெற்றி வேல் யாத்திரையை நடத்துவோம் என அடுத்தடுத்து வேல் யாத்திரை நடந்து கொண்டே இருக்கிறது, காவல் துறையும் வழிமறித்து கைது செய்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் முதல் கட்ட வேல் யாத்திரை கடந்த நவம்பர் 10ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி இரண்டாம் கட்ட வெற்றி வேல் யாத்திரை தொடங்க இருக்கிறது.

வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி நடைபெறும் வெற்றிவேல் யாத்திரை திருச்சியில் தொடங்கி, திண்டுக்கல் வழியாக தேனியில் முடிவடைய திட்டமிட பட்டுள்ளது, இதற்காக பாஜக வரும் தேர்தலில் தேர்தலில் வெற்றிபெறவும், வெற்றி வேல் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறவும் இன்று தேனி சீலையம்பட்டி பிரத்யங்கிரா தேவி கோவிலில் தேனி மாவட்டம் பாஜக ஐடி பிரிவு சார்பில் “நிகம்பல யாகம்” பாஜக மாநில ஐடி பிரிவு தலைவர் CTR நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகம்பல யாகத்தில் அனைத்து மாவட்ட மண்டல் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.