கமல் நடித்த நம்மவர் படம் சாயலில் விஜயின் மாஸ்டர்.! அட்லீயை பின்பற்றுகிறாரா லோகேஷ் கனகராஜ்.?

0
Follow on Google News

இயக்குனர் அட்லீ எடுக்கும் படங்கள் அனைத்தும் பல்வேறு விமர்சனங்களை சந்திக்கும், அந்த வகையில் அட்லீ இயக்கும் படங்களின் கதைகள் எதாவது ஒரு படத்தில் இருந்து காப்பியடிக்க பட்டது என கடும் விமர்சனம் எழும், அந்த வகையில் அவர் இயக்கிய படங்களில், ராஜா ராணி திரைப்படம், மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான மௌன ராகம் திரைப்படத்தின் சாயல் என்றும், தெறி திரைப்படம் விஜயகாந்த் நடித்த சத்ரியன் திரைப்பட சாயல் என்றும், மெர்சல் திரைப்படம் அபூர்வ சகோதரர் திரைப்படத்தின் சாயல் என விமர்சனம் எழுந்தது.

மேலும் கடைசியாக அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படத்தில் வரும் பல்வேறு காட்சிகள் ஆங்கில திரைப்படத்தில் இருந்து காப்பியடிக்கப் பட்டதாகவும், ஆங்கில திரைப்படத்தில் வெளியான அந்த காட்சிகளையும், பிகில் படத்தில் வெளியான அதே காட்சியையும் தொடர்பு படுத்தி இயக்குனர் அட்லீயை வலைதளவாசிகள் கிண்டல் செய்து வந்தது குறிப்பிடதக்கது, மேலும் விஜய் நடித்த மெர்சல் படத்தில் பல காட்சிகள் ஆங்கில படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்ற சர்ச்சை வெடித்தது.

இதனை தொடர்ந்து இயக்குனர் அட்லீ என்றாலே எதாவது ஒரு படத்தில் இருந்து கதையையும், பல்வேறு படங்களில் இருந்து ஒவ்வொரு கட்சியாக செங்கல் கற்களை உருவது போன்று உருவி எடுக்க கூடிய இயக்குனர் என்கிற முத்திரை விழுந்துள்ளது, இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

இந்த ட்ரைலரில் பல்வேறு காட்சிகள், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் திரைப்பட கட்சிகளுடன் ஒத்து போவதாக விமர்சனம் எழுந்துள்ளது, நம்மவர் திரைப்படத்தில் கமல் தோன்றும் காட்சிகளுடன், நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரைலரில் இடம் பெற்றுள்ள காட்சிகளை ஒப்பிட்டு வலைதளவாசிகள் நம்மவர் படம் சாயலில் இருப்பதாக விமர்சனம் செய்து வருகின்றனர், மேலும் திரைப்படம் எடுப்பதில் இயக்குனர் அட்லீயை பின்பற்றுகிறாரா மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என பலர் கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.