பிரதமரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியவர் தியாகியா.? முதல்வருக்கு அர்ஜுன் சம்பத் கண்டனம்..

0
Follow on Google News

பிரதமரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டவரை ஏதோ அவர் தியாகி போல சித்தரிப்பாதக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கண்டன தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். பாரத பிரதமரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த கொரோனா நோய் காரணமாக உயிரை இழந்த 83 வயதான ஸ்டேன் லூர்துசாமி என்பவரை மனித உரிமை ஆர்வலர் என்றும் சமூக செயல் பாட்டாளர் என்றும் பிரபலப்படுத்தி இவரது மரணத்திற்கு மத்திய அரசும் சம்பந்தப்பட்ட புலனாய்வு அமைப்புகள் காரணம் என்கிற குற்றச்சாட்டை சுமத்தி தமிழகத்தில் செயல்பாடுகள்.

முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பாதிரியார் ஸ்டேன் அவர்களை ஏதோ தேச தியாகி போலவும், அடித்தட்டு மக்களின் உரிமைக்காக போராடி சிறை சென்ற தியாகி போன்ற, ஒரு தோற்றத்தை உருவாக்கி அவருடைய மறைவுக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். பாதிரியார் ஸ்டேன் அவர்கள் ஒரு அர்பன் நக்சல் வாதியாகவும், மாவோயிஸ்டுகள் ஆதரவாளராக செயல்பட்டதாகவும், நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் இயக்கங்களுக்கு நிதி சேகரித்ததாக வன்முறை மற்றும் பயங்கரவாத செயல்களை, தூண்டியதாக அவர் மீது தேசிய புலனாய்வுத்துறை குற்றம் சாட்டி கைது செய்துள்ளது.

அதே போன்று காங்கிரஸ் கட்சி தலைவர்களும் ஸ்டேன் அவர்கள் மரணத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி அவருடைய மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இருந்து ஊர்வலம் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு இந்து மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். பாரத பிரதமரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நபருக்கு ஏதோ அவர் தியாகி போலவும் தேச நலனுக்காக சிறை சென்றவர் போலவும் தோற்றமளிக்க முயலும் இதுபோன்ற நடவடிக்கைகள் இந்த நாட்டிற்கு எதிரானதாகவும் பிரிவினையை ஊக்கப்படுத்துவதாக நாங்கள் கருதுகிறோம்.

ஏற்கனவே நக்சல்கள், பிரிவினை வாதிகள், தேசத்திற்கு எதிராக கருத்து தெரிவிப் பவர்கள்,மோடி வெறுப்புப் பிரச்சாரம் செய்பவர்கள் மத்திய அரசுக்கு எதிராக செயல்படுபவர்கள்,மத்திய மாநில அரசின் உறவுகளை சீர்குலைக்க முயற்சி செய்பவர்கள், அவர்களின் கருத்துக்களை கேட்டு திமுக அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. ஸ்டென் சாமி போன்ற அர்பன் நக்சல் நபர்களுக்கு ஆதரவு தெரிவித்து கருத்தினை தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பதிவு. செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.தமிழக மண்ணில் ஏற்கனவே பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி அவர்களை கொலை செய்துள்ளனர் பிரிவினைவாத பயங்கரவாத சக்திகள்.

இதிலிருந்து அனுபவம் பெற்றுக் கொள்ளாத காங்கிரஸ் கட்சி தற்போது பிரிவினைவாத நக்சல் பயங்கரவாதிகளை. ஆதரித்து ஊக்கப்படுத்துவது போல் செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திராவிட முன்னேற்ற கழகமும் இத்தகைய பிரிவினைவாத நக்சல் சக்திகளுக்கு ஆதரவாக இருந்து ஒரு காலத்திலே தமிழகத்திலே ஆட்சியை இழந்ததை யாரும் மறந்து விடக்கூடாது. தமிழகத்தில் தனது கட்சித் தலைவர். ராஜீவ் காந்தியை பிரிவினைவாதத்திற்கு பயங்கரவாதத்திற்கும் பறிகொடுத்த காங்கிரஸ் கட்சி,

நக்சல் மற்றும் தேச விரோத சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பாதிரியார், பிரதமரை கொல்ல முயற்சி சதித்திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட ஸ்டேன் மரணத்திற்கு இங்கே ஊர்வலம் சென்றது மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் விழிப்புணர்வுடன் இருந்து செயல்பட வேண்டும் பிரிவினை வாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆதரவான சூழ்நிலையை தமிழகத்தில் ஏற்படுத்திட அனுமதிக்கக்கூடாது என அர்ஜுன்சம்பத் தெரிவித்துள்ளார்.