Loser is the real winner, பெருந்தன்மையுடன் செயல்பட்ட அண்ணாமலை IPS .! பேராசிரியர் புகழாரம்..

0
Follow on Google News

தேர்தலுக்கு பிந்தைய அரசியல் களத்தில் அண்ணாமலை ஐபிஎஸ் தோற்று போனதற்கு அனுதாபமும் ஆதரவும் பெருமளவு காண படுகிறது என பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் புகழாரம் சூட்டினார்.மேலும் நமது தின சேவல் நியூஸ்க்கு அவர் அளித்த பேட்டியில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில், தொகுதிகள் அடையாளம் காணும் பணி தொடங்கியது, அந்த கட்டத்தில் பரஸ்பரம், விட்டுக்கொடுத்தல், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல், போன்ற அணுகுமுறையில் அதிமுக மற்றும் பாஜக தொகுதிகளை அடையாளம் கண்டது, அப்போது கோவையில் ஒரு தொகுதி மட்டுமே பாஜக கூட்டணிக்கு ஒதுக்கப்படும் என்று முடிவானது.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும்,தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் அவர்களுக்கு கோவையில் கிடைத்த அந்த ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்ற சூழலில், சவாலாக இருந்த அரவக்குறிச்சி தொகுதியை அண்ணாமலை தேர்தெடுத்தார், வெற்றி வாய்ப்புகள் குறைவாக உள்ள தொகுதி என்று தெரிந்தே அவர் அரவக்குறிச்சி தொகுதியை தேர்தெடுத்தது அப்போதே அவருடைய பெருந்தன்மையை காட்டியது, அவர் நினைத்திருந்தால் சிறுபான்மை சமூகம் குறைவாக உள்ள அல்லது வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதியை கேட்டு பெற்றிருக்கலாம் என தெரிவித்த பேராசிரியர்.

ஆனால் அவர் மற்றவர்களுக்கு விட்டு கொடுத்து சவாலான தொகுதியை தேர்தெடுத்து, முழு வீச்சுடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார், இளைஞர்கள், பெண்கள் என அணிவகுத்து அண்ணாமலை வெற்றிக்காக தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்தனர். மேலும் தேசமே அரவக்குறிச்சி தொகுதியை உற்று நோக்கி கவனித்தது, ஆனால் ஒட்டு மொத்தமாக சிறுபான்மை மக்களின் வாக்குகள் பாஜகவுக்கு எதிராக பதிவானதும், திமுகவின் சூழ்ச்சி வலை பற்றி அறியாத அப்பாவி மக்களாலும் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது.

ஆனால் இந்த சூழலிலும் மனம் தளராமல் மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றுவேன் என அண்ணாமலை முடிவு செய்துள்ளார், இன்றை தமிழக அரசியல் களத்தில் தேர்தலில் தோல்வி அடைந்த அண்ணாமலைக்கு மக்கள் மத்தியில் அனுதாபமும் , ஆதரவும் ஏற்பட்டிருப்பது தான் அவருக்கு கிடைத்த உண்மையான வெற்றி, அதே போன்று 1000 வாக்குகள் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் ஒருவர் தோல்வி அடைந்தால் அதை தோல்வியாக நான் ஏற்று கொள்ளவில்லை, அந்த வகையில் தாராபுரத்தில் போட்டியிட்ட மாநிலத்தலைவர் எல்.முருகன் தார்மீக அடிப்படையில் வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன்.

அண்ணாமலை பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தாலும், இவர் வெற்றி பெறவில்லையே என தமிழக மக்களின் ஏக்கம், அவருக்கு ஏற்பட்டிருக்கும் அனுதாபம், Loser is the real winner, தேர்தலில் வீழ்ந்தவரை வெற்றி அடைந்தவராகவே மக்கள் நினைப்பதை காண்பிக்கிறது, அண்ணாமலை அவர்களுக்கு எனது பாராட்டுக்கள், மேலும் தேர்தலுக்கு பிந்தைய அரசியல் களத்தில் அண்ணாமலை ஐபிஎஸ் தோற்று போனதற்கு அனுதாபமும் ஆதரவும் பெருமளவு காணப்படுகிறது என பேராசிரியர் புகழாரம் சூட்டினார்.