தமிழ்கத்தில் பாஜக வெற்றியை உறுதி செய்த முதல் 5 தொகுதிகள்… எந்தந்த தொகுதிகள் தெரியுமா.? இதோ சர்வே ரிப்போர்ட்…

0
Follow on Google News

பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை, நான்கு வகைகளில் அந்த கட்சி தலைமை பிரித்துள்ளது, அதில் முதலில் உறுதியாக பாஜக வெற்றி பெரும் தொகுதிகளை ஸ்டார் கேட்டகிரி, இரண்டாவது எதிர்கட்சிக்கு நேரடியாக கடும் போட்டியாளராக வெற்றி பெரும் வாய்ப்பு உள்ள பாஜக வேட்பாளர்களை A கேட்டகிரியில், அதற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்திற்கான கடும் போட்டியாளராக இருக்கும் பாஜக வேட்பாளர்களை B கேட்டகிரியிலும், முன்றாவது இடம் தான் என்கிற வேட்பாளரை C கேட்டகிரி என நான்கு வகையாக பாஜக தலைமை அந்த வேட்பாளர்களை பிரித்து அதற்க்கு ஏற்றார் போன்று தேர்தல் வியூகங்கள் வகுத்து வருகிறது.

அதாவது பாஜக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மட்டும் இவ்வாறு நான்கு கேட்டகிரியாக பிரித்துள்ள பாஜக தலைமை, இதில் கூட்டணி கட்சிகளை இதற்குள் கொண்டு வரவில்லை, அந்த வகையில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் உறுதியாக இவர்களெல்லாம் வெற்றி பெறுவார்கள் என உளவு துறை ரிப்போர்ட் மூலம் அறிந்து கொண்டு, ஸ்டார் கேட்டகிரியில் இருக்கும் அந்த ஆறு பாஜக வேட்பாளர்கள் யார் என்பதை பார்ப்போம்.

கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதியாக வெற்றி பெற்றுவர் என்கிறது கோவை தேர்தல் களம், இதில் பாஜக – அதிமுக இருவருக்கும் இடையில் நேரடி போட்டியாக அமைத்துள்ள நிலையில், திமுக மூன்றாவது இடத்தை பிடிக்கும் வாய்ப்பு தான் அதிகம் என்கிறார்கள். அதே நேரத்தில் அதிமுக பாஜக நேரடி போட்டியாக இருந்தாலும் கூட, அதிமுக வேட்பாளரை விட அண்ணாமலை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்கிறது கோவை தேர்தல் கள நிலவரம்.

இரண்டாவதாக திருவெல்வேலி தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் இருவருக்கும் இடையில் நேரடி போட்டியாக உள்ளது, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மூன்றாவது இடத்தை பிடிக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. திருநெல்வேலி தொகுதியில் பாஜக ஸ்டார் கேட்டகிரியில் இருக்கும் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது.

அடுத்ததாக ராதிகா சரத்குமார் போட்டியிடும் விருதுநகர் தொகுதியில் மும்முனை போட்டி நிலவி வருவதாக பரவலாக பேசப்பட்டு வந்தாலும் கூட, இரண்டாவது இடத்தை பிடிக்க போவது யார் என்பதில் அந்த தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விஜய்காந்த் மகன் விஜயபிரபாகரன் மற்றும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் இடையில் இரண்டாம் இடத்திற்கான போட்டி கடுமையாக நிலவி வருகிறது.

விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் மற்றும் அவருடைய கணவர் சரத்குமார் இருவரின் பிரச்சார யுக்திகள் மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது, குறிப்பாக பெண்கள் தாய்மார்களின் பெருபாலான வாக்குகள் ராதிகா சரத்குமாருக்கு தான் என்கிறது தேர்தல் களம், அந்த வகையில் பாஜக சார்பில் வேறு எந்த ஒரு வேட்பாளர் போட்டியிட்டாலும் இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்பு இருந்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்லும் அளவுக்கு விருதுநகர் தொகுதியில் மிக சரியான வேட்பாளராக ராதிகா சரத்குமாரை பாஜக தேர்வு செய்துள்ளது,

இதே போன்று பாஜக உறுதியாக வெற்றி வாய்ப்பு உள்ள ஸ்டார் கேட்டகிரியில், தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சௌந்தராஜன், நீலகிரி தொகுதியில் போட்டியிடும் எல்.முருகன், ஆகியோரும் ஸ்டார் கேட்டகிரியில் இடம்பெற்றுள்ளார்கள், அந்த வகையில் ஸ்டார் கேட்டகிரியில் உள்ள இந்த ஐந்து தொகுதியில் பாஜக வெற்றியை உறுதி செய்யும் தொகுதிகளாக அமைத்துள்ளது. மேலும் பாஜக போட்டியிடும் தொகுதியில், வெற்றி வாய்ப்பு உள்ள எ கேட்டகிரி வேட்பாளர், இரண்டாம் இடம் பிடிக்க உள்ள B கேட்டகிரி வேட்பாளர்கள், மூன்றாவது இடம் தான் என C கேட்டகிரியில் உள்ள வேட்பாளர்கள் யார்.? யார்.? என்பது அடுத்தடுத்து வரும் நாட்களில் பார்க்கலாம்.