உதயமாகிறது கலைஞர் திமுக.! மூன்றாவது அணியில் கமல்ஹாசன் உடன் கை கோர்க்கிறார் முக அழகிரி.!

0
Follow on Google News

தனது சகோதரர் முக ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் முக அழகிரி. சமீபத்தில் மதுரையில் தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்திய முக அழகிரி விரைவில் தனது அரசியல் குறித்த முடிவை அறிவிப்பேன் என தெரிவித்திருந்தார், மேலும் அந்த கூட்டத்தில் முக ஸ்டாலினை மிக கடுமையாக பேசியிருந்தார், இந்த கூட்டடத்தில் எதிர்பார்த்ததை விட பெருமளவில் கூட்டம் கூடியது முக ஸ்டாலினுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தேர்தல் நெருக்கி வரும் நிலையில், முக அழகிரியின் முடிவுகள் தனது முதல்வர் கனவுக்கு ஆப்பு வைப்பதை உணர்ந்த முக ஸ்டாலின் தனது குடும்ப உறுப்பினர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் முரசொலி அறக்கட்டளையில் இயக்குனராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து தனது மகன் துரை தயாநிதி அழகிரியை இயக்குனராக நியமிக்க வேண்டும் , அதை முதலில் ஸ்டாலின் செய்யட்டும் மற்றதை பிறகு பேசிக்கலாம் என கூறிவிட்டார் அழகிரி என கூறப்படுகிறது.

இந்நிலையில் கமல்ஹாசன் உடன் உதயநிதி ஒரு முறையும், ஸ்டாலின் மருமகன் சபரீசன் இரண்டு முறையும் பேச்சுவார்த்தை நடத்தியாக செய்திகள் வெளி வந்தது, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை திமுக கூட்டணியில் இடம்பெற செய்து, காங்கிரஸ் கட்சியை கழட்டி விடும் முடிவில் திமுக இருந்தது, ஆனால் கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இடம்பெற விரும்பவில்லை, தொடர்ந்து திமுக தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தினாலும் கமல்ஹாசன் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை.

இதனை தொடர்ந்து முக அழகிரி மகன் தயாநிதி அழகிரி சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்து பேசியதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, வரும் சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் புது கட்சி தொடங்கினால் அதில் இடம் பெறுவார் முக அழகிரி என கூறப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சிக்கு குட் பை சொன்னதை தொடர்ந்து, கலைஞர் திமுக என்று புதிய கட்சியை தொடங்கி கமல்ஹாசன் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் திமுக கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகள் தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி ஏற்பட்டால், அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி கமல்ஹாசன் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது, இந்நிலையில் முக ஸ்டாலின் ஆட்சியில் அமர்ந்து விட கூடாது என்பதில் முக அழகிரி உறுதியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .