ஜோதிமணிக்கு டெபாசிட் கிடைக்காது… இந்த 5 தொகுதிகளில் தோல்வியை உறுதி செய்த காங்கிரஸ்… வெற்றியை கொண்டாட தொடங்கிய பாஜக…

0
Follow on Google News

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தமிழகத்தில் போட்டியிட்ட ஒன்பது தொகுதிகளிலும் திமுகவினர் முது முழு ஒத்துழைப்பு கொடுத்து காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்கள் திமுகவினர்கள். ஆனால் இம்முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு போதிய ஒத்துழைப்பை திமுகவினர் கொடுக்கவில்லை என்கிற குற்றசாட்டு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

இதனால் இம்முறை காங்கிரஸ் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது, மேலும் காங்கிரஸ் தமிழகத்தில் போட்டியிடும் பல தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது. குறிப்பாக காங்கிரஸ் ஸ்டார் வேட்பாளராக கருதப்படும் ஜோதிமணிக்கு சீட்டு கொடுத்ததிலேயே கடும் அதிருப்தியில் இருக்கும் திமுகவினர், எப்படியாவது ஜோதிமணியை மண்ணை கவ்வ வைக்க வேண்டும் என்பதில் பாஜகவினரை விட திமுகவினர்கள் தான் தீவிரமாக கரூரில் உள்ளடி வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுக்கு ஒரு அதிரடி உத்தரவை அனுப்பியதாகவும், அதில் ஜோதிமணிக்கு எதிராக வேலை பார்த்து டெபாசிட் வாங்காதபடி மண்ணைக் கவையுங்கள் என்று சொன்னதாகவும் கரூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜோதிமணியை மண்ணை கவ்வ வைக்க செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் மிகத் தீவிரமாக கரூரில் உள்ளடி வேலை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து கரூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறங்கியுள்ள செந்தில்நாதன் மிக தீவிரமாக தன்னுடைய களப்பணியை செய்து வருவது, மேலும் கரூர் மக்கள் மத்தியில் பாஜகான ஆதரவு அனைத்தும் செந்தில்நாதனுக்கான வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக கரூர் தொகுதியில் உள்ளது.அதே போன்று காங்கிரஸ் போட்டியிடும் கடலூர் மயிலாடுதுறை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய தொகுதி தொகுதிகளும் காங்கிரஸ் தோல்வி முகத்தில் உள்ளது.

இதில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் மாணிக்கம் தாகூர் மீது அந்த தொகுதி மக்கள் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள். மேலும் இம்முறை பாஜக சார்பில் ராதிகா சரத்குமார், தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுவதால் இந்த தொகுதி ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது. அதே நேரத்தில் மாணிக்கம் தாகூர் மீது திமுகவினர் மத்தியில் மட்டுமல்ல காங்கிரசார் மத்தியிலும் கூட கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் விருதுநகர் தொகுதியை திமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்று அங்கு விருதுநகர் தொகுதியில் உள்ள திமுகவினர் விருப்பம் தெரிவித்து வந்த நிலையில், மீண்டும் தன்னுடைய டெல்லி செல்வாக்கை பயன்படுத்தி மாணிக்கம் தாகூர் சீட் பெற்றுவிட்டார். இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் திமுகவினர் சரிவர மாணிக்கத்திற்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் திமுகவினரே ஓட்டு கேட்டு விருதுநகர் தொகுதி திமுகவினரே ஓட்டு கேட்டு போக முடியாத சூழ்நிலை மாணிக்கம் தாகூர் உருவாக்கி வைத்துள்ளார். அந்த வகையில் தென் மாவட்ட மக்கள் மத்தியில் அதிமுக மீது இருக்கும் அதிருப்தியின் காரணமாக விஜய பிரபாகரன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை, அந்த வகையில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமாரின் வெற்றி வாய்ப்பு என்பது விருதுநகர் தொகுதியில் மிகப் பிரகாசமாக இருப்பதை அந்த தொகுதியில் பார்க்க முடிகிறது.