கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியது திமுக தலைமை, அதே போன்று 2016 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கியதையும் சுட்டிக்காட்டி, 2021 சட்டசபை தேர்தலில் அதே தொகுதியை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கேட்டது. ஆனால் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்றாலும் பரவாயில்லை 15 தொகுதி என்று அடிமட்டத்திற்கு தொகுதி பங்கீடு பேசியது திமுக.
இறுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி கண்ணீர் விட்டு அழும் அளவிற்கு சென்றுவிட்டார். இதன் பின்பு பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு 25 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியது. திமுக ஆட்சிக்கு வந்த பின்பு நடந்த நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு போதிய இடங்கள் ஒதுக்காமல் தொடர்ந்து அலட்சியப்படுத்தியது திமுக.
இந்நிலையில் கரூர் மாவட்ட அரசியலில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மற்றும் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி இருவருக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியை மீண்டும் ஜோதிமணிக்கு கொடுக்கக் கூடாது திமுக சார்பில் தான் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்பதில் தற்பொழுது இருந்தே செந்தில் பாலாஜி தீவிரமாக வேலை பார்த்து வருகிறார்.
திமுக தலைமையும் செந்தில் பாலாஜிக்கு கிரீன் சிக்னல் காட்டியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பாதிக்கு பாதி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போன்று இம்முறை குறைந்தது 30 தொகுதிகளில் திமுக போட்டியிடவும் 10 தொகுதிகள் மட்டுமே கூட்டணி கட்சிக்கு பகிர்ந்து அளிக்கவும் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமே வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கும் முடிவில் திமுக தலைமை இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி போட்டியிட்ட கரூர் தொகுதி இம்முறை திமுக விட்டுக் கொடுப்பதற்கு தயாராக இல்லை. அதே போன்று காங்கிரஸ் எம்பி மாணிக்தாகூர் போட்டியிட்ட விருதுநகர் தொகுதியை மதிமுகவுக்கு ஒதுக்கப்படும். இந்த நிலையில் திமுக கூட்டணியில் தொடர்ந்தால் காங்கிரஸ் கட்சிக்கும் போதிய இடம் கிடைக்காது மேலும் தனக்கு கரூர் தொகுதியிலும் நிச்சயம் மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் கிடைக்காது என்பதை நன்கு அறிந்துள்ளார் ஜோதிமணி.
இந்நிலையில் இந்தியா முழுவதும் ராகுல் காந்தி சமீபத்தில் பாதயாத்திரை தொடங்குவதற்கு முன்பு தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஜோதிமணியிடம் ஆலோசித்துள்ளார். அப்போது திமுக கூட்டணியில் தொடர்ந்தால் 5 தொகுதிகளுக்கு மேல் நமக்கு தர மாட்டார்கள். அதை பெற்றுக்கொண்டு போட்டியிட்டால் இந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் காணாமல் போய்விடும் என்று ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
மேலும் கூட்டணி கட்சிகள் துணை இல்லாமல் எப்போதுமே திமுக வெற்றி பெற முடியாது. அதே நேரத்தில் பாஜக மற்றும் எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள விரிசலை பயன்படுத்தி எடப்பாடி தலைமையிலான அதிமுக உடன் காங்கிரஸ் மற்றும் கமலஹாசன் உட்பட காட்சிகளை ஒன்றிணைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கலாம் என தமிழக அரசியல் நிலவரம் குறித்து ராகுல்காந்தியிடம் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
ஜோதிமணியின் ஆலோசனையை ஏற்று ராகுல்காந்தி அதற்கான ஏற்பாடுகளை இப்ப இருந்தே தொடங்கவும் உத்தரவிட்டுள்ளார் ராகுல்காந்தி. இந்நிலையில் 2021 நாடாளுமன்ற தேர்தலின் கூட்டணிக்கான முன்னோட்டம் தான் கமல்ஹாசன் டெல்லியில் நடந்த ராகுல் காந்தியின் பாதயாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் என்றும், மேலும் தன்னை அரசியல் இருந்து அப்புறப்படுத்த நினைத்த செந்தில் பாலாஜிக்கு என்னுடைய டெல்லி செல்வாக்கை வைத்து நான் யார் என்று காண்பிக்கிறேன் என்றும் ஜோதிமணி சபதம் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.