தலைவர் பதவிக்கு அடி போட்ட ஜோதிமணி..! அடுத்து எம்பி சீட்டும் கிடையாது என எச்சரித்த காங்கிரஸ் தலைமை..

0
Follow on Google News

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற ஜோதிமணி, அதன் பின்பு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை விவகாரங்களில் தலையிட்டு ஏற்கனவே பல கோஷ்டிகளாக பிரிந்து கிடைக்கும் காங்கிரஸ் கட்சியில் தனக்கென ஒரு கோஷ்டியை உருவாக்கி வருகிறார் என்றே சொல்லலாம். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பொது தமிழக காங்கிரஸ் தலைமையை நேரடியாக மிக கடுமையாக சாடினார் ஜோதிமணி.

தொகுதி,வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை.நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை. நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம்.

காங்கிரஸ் கட்சி தொண்டர்களில் இரத்தத்திலும்,வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமையில்லை. இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள்.நமது கட்சியையும்,நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண்முன்னால் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு எனது இரத்தம் கொதிக்கிறது.

எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன்.நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போர் கொடி தூக்கினர் ஜோதிமணி, இதற்கு பதிலடி தரும் விதத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா, வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடுவதாக கருத்துக்களை பரப்பி நமது தலைவர்களை நாமே களங்கப்படுத்தலாமா ? 2014 மக்களவை தேர்தலில் டெபாசிட் இழந்த ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கிய தலைவர்களை இழிவுபடுத்தலாமா ?

கடந்த 2016 கரூர் சட்டமன்றத் தேர்தலில் 401 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பேங்க் சுப்பிரமணியத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று சண்டித்தனம் செய்து பழிவாங்கிய ஜோதிமணி தொண்டர்களுக்காக ரத்தம் கொதிப்பதாக கூறுவுது ஒரு அரசியல் மோசடி.ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. காங்கிரஸ் கட்சியை களங்கப்படுத்துகிற ஜோதிமணி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே.எஸ் அழகிரியின் தீவிர ஆதரவாளரான கோபண்ணா பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் நடந்த பின்பு ஜோதிமணிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலர் ஜோதிமணிக்கு அடுத்த நாடளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படாமல் இருக்க தற்போதே அதற்காக வேலைகளை தொடங்கி விட்டனர், ஆனால் ஜோதிமணி வரும் நாடாளுமனற தேர்தலுக்குள் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை கைப்பற்றி விட்டால், நாம் பார்த்து தானே மற்றவர்களுக்கு சீட் வழங்க முடியும் என்கிற முடிவில் தற்போது காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காய்களை நகற்றி வருகிறார்.

ஆனால் ஜோதிமணிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆங்காங்கே செக் வைத்து ஜோதிமணி நகரமுடியாதவாறு செய்து விட்டனர், இதனை தொடர்ந்து டெல்லி காங்கிரஸ் தலைமையின் முக்கிய தலைவர் ஒருவர் ஜோதிமணியிடம், நீங்க தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அடிபோட்டுக்கிட்டு இருக்கீங்க ஆனால் உங்களுக்கு அடுத்து தேர்தலில் சீட் கிடைக்குமா என்பதே சந்தேகம் என எச்சரித்ததாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிபிடத்தக்கது.