இரக்கமற்ற கொள்ளையில் ஈடுபடுவது பற்றி ஜோதிமணி எம்பி கடிதம்.! விரைந்து நடவடிக்கை எடுத்த முதல்வர்..

0
Follow on Google News

தனியார் மருத்துவமனைகள் அரசு காப்பீட்டை ஏற்க மறுப்பது தொடர்பாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கரூர் எம்பி ஜோதிமணி கடந்த ஜூன் 8ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளார், முதல்வர்க்கு அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது. மக்களை வாட்டிவதைக்கும் கொரொனா நோய் தொற்று பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்துவரும் விரிவான நடவடிக்கைகள் மிகுந்த நம்பிக்கையை அளிக்கின்றன.

இக்காலகட்டத்தில், தனியார் மருத்துவமனைகள் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் மூலம் சிகிச்சை அளிக்க மறுப்பது குறித்து தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். கொரொனா சிகிச்சை மட்டுமல்லாது, இதய அறுவை சிகிச்சை, மூளை அறுவை சிகிச்சை உள்ளிட்ட உயிர்காக்கும் பல்வேறு சிகிச்சைகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் செல்லாது என்று தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து தெரிவித்து வருவதாக தினமும் பல்வேறு மக்களிடமிருந்து புகார் வருகின்றன.

இந்த இக்கட்டான காலத்தில், ஏற்கனவே ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும்
நிலையில், தனியார் மருத்துவமனைகள் இரக்கமற்ற கொள்ளையில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது எனவே, தமிழ்நாடு அரசு, உடனடியாக தலையிட்டு, இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசாணைகளையும் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் மீண்டும் அனுப்பி அவற்றை சரியாக பின்பற்றுவதை உறுதி செய்யவேண்டும்.

மேலும் மாவட்ட அளவில், குழு அமைத்து இத்திட்டம் சரியாக நடைமுறைபடுத்துவதை கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார், இந்நிலையில் அவர் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் 10% படுக்கைகள் அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக நடவடிக்கை எடுத்து கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு உதவிய தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு மன்மார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாக ஜோதிமணி தெரிவித்துள்ளார்.