இது ஒரு பொழப்பா.? போலியான புகைப்படம் வெளியிட்டு வசமாக கையும் களவுமாக மாட்டிய ஜோதிமணி.!

0
Follow on Google News

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் மஹாஸ்டரா மாநிலம் மும்பையில் விவசாயிகள் கலந்துகொண்ட பேரணி புகைப்படத்தை தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் பேரணி என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து கையும் களவுமாக மாட்டியுள்ளார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, இது போன்று பொய்யான தகவல்களை பரப்புவது இது ஜோதிமணிக்கு புதிதல்ல.

சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்வது, பின் கடும் எதிப்பு கிளம்பியதும் அதை நீக்கிவிட்டு நான் அப்படி ஒரு பதிவு போடவே கிடையாது என அந்தர் பல்டி அடிப்பதை வாடிக்கையாக செய்து வருகிறவர் ஜோதிமணி, பிரபல சினிமா விமர்சகர் பிரசாந்தை ஒரு முறை “போடா முட்டாள்” என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து பின் அது பெரும் சர்ச்சையானதும், உடனே அந்த பதிவை நீக்கிவிட்டு நான் அப்படி ஒரு பதிவே போடாவில்லை என்று அந்தர் பல்டி அடித்தவர் ஜோதிமணி என்பது குறிப்படத்தக்கது.

மேலும் தொலைக்காட்சி விவாத நிகச்சி ஒன்றி பிரதமர் மோடியை கற்களால் அடிக்க வேண்டும் என வன்முறையை தூண்டும் விதத்தில் ஜோதிமணி பேசியதற்கு பாஜக சார்பில் பதிலடி கொடுத்த அக்கட்சியை சேர்ந்த கரு.நாகராஜன் பெண்களுக்கு எதிராக பேசுவதாக விவகாரத்தை திசை திருப்பி தான் பிரதமருக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதை மூடி மறைக்க முயன்ற ஜோதிமணி நடத்திய நாடகம் தமிழ்நாடே அறியும்.

இந்நிலையில் ஜோதிமணி தனது முகநூல் பக்கத்தில், நமக்கு உணவிடும் விவசாயிகள் எலும்பை உறையவைக்கும் குளிரில் மோடிஅரசின் அடக்குமுறையை தாண்டி, விவசாய விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிக்கொண்டிருப்பதை உலகிற்குக் காட்டாமல் இருட்டடிப்பு செய்யும் ஊடகங்கள் நமது ஜனநாயகத்தின் சாபம். அவர்கள் போராடுவது நமது வயிற்றுக்கும் சேர்த்துதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என பதிவு செய்தவர்.

2018ம் ஆண்டு முன்பையில் நடைபெற்ற விவசாயி பேரணி புகைப்படத்தை பதிவு செய்து டெல்லியில் நடைபெறும் போராட்டம் போன்று சித்தரிக்க முயன்ற ஜோதிமணி கையும் களவுமாக மாட்டியுள்ள சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து ஜோதிமணியை வெளுத்து வாங்கி வரும் நெட்டிசென்கள் ஜோதிமணி உண்மையை சொன்னால் தான் ஆச்சரியம், அவர் பொய்யான தகவலை வெளியிடுவது இது ஒன்றும் புதிதல்ல என நெட்டிசென்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்படத்தக்கது.