அதிமுகவுக்கு எதிராக வன்முறையை தூண்டி திமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் பலே திட்டமா.?

0
Follow on Google News

வரும் சட்டசபை தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாமக அந்த கூட்டணியில் இருந்து விலகி திமுக கூட்டணியில் இடம் பெற முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது, தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறும் பாமக கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு வரை அதிமுக அரசை மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ், திடீரென அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அணைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவினார்கள்.

இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து திரைமறைவில் பாமக பேச்சு வார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது, பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டாலும், விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் பாமக இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இடம்பெற்றால் அது பொருந்தாத கூட்டணியாக தான் இருக்கும் என்பதால் விடுதலை சிறுத்தை கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்ற திமுக முடிவு செய்துள்ளது.

ஆனால் கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிடாமல் இருக்க திமுகவுக்கு பல்வேறு நெருக்கடிகளை திருமாவளவன் அளித்துவருவதாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து வன்னியர் சமூக மக்களின் நம்பிக்கை இழந்து வரும் பாமக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு வழங்கப்படும் தொகுதிகளை குறைத்து வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்நிலையில் திமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் தன் பாமகவினரை அதிமுக அரசுக்கு எதிராக திசை திருப்பி மிக பெரிய போராட்டத்தை நடத்துவதன் மூலம் அந்த எதிப்பை திமுக கூட்டணிக்கு ஆதரவாக மாற்றி, பெரும் தொகுதிகளை பெற்று திமுக கூட்டணியில் இடம்பெற ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் இந்த போராட்டம் வன்முறையாக வெடிக்கும் பட்சத்தில் மக்கள் மத்தியில் மிக பெரிய அவப்பெயரை பாமகவுக்கு பெற்று தரும் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து வடமாவட்டங்களில் நடக்கும் ஆர்பாட்டங்களில் பாமகவை சேர்த்தவர்கள் பேருந்து மற்றும் ரயிகள் மீது கற்கள் வீசி வருவது பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது, மேலும் பல இடங்களில் பேருந்துகள் செல்ல முடியாமல் ஸ்தாம்பித்து போய் உள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.பல இடங்களில் ஆர்ப்பாட்டம் வன்முறையாக உருவெடுத்து வரும் நிலையில் ராமதாஸ் தனது டிவீட்டர் பக்கத்தில், என் உடல் மட்டும் தான் தைலாபுரத்தில் உள்ளது…. உயிரும், உள்ளமும் சென்னை போராட்டக்களத்தில் தான் உள்ளன என வீட்டில் அமர்ந்து கொண்டே போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை தூண்டி விடுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.