ஆ.ராசா முதல்வர் வேட்பாளரா.? ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி இடையே நேரடி விவாதம்.!சவாலை ஏற்பாரா ஸ்டாலின்.?

0
Follow on Google News

சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி திமுக கொள்ளையடித்த கட்சி. தமிழகத்தின் ஒட்டு மொத்த பட்ஜெட் தொகையான ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் செய்தது திமுகதான். அவருடைய கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு 2 ஜி அலைக்கற்றை ஊழல் நிகழ்ந்துள்ளது. அவருடைய குடும்ப தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி ஊழலில் கைமாறி உள்ளது.

மெகா ஊழல் செய்துவிட்டு புத்தர், அரிச்சந்திரன் போல் பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிக்குவார் என்றும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார். இதற்கு அ.ராசா பதிலளிக்கையில், சர்க்காரியா கமிஷன் கூறியதாக, தி.மு.க விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்துள்ளதாகக் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, அவர் சொல்லிக்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் அவருடைய இயக்கத்தில் இருப்பவர்களும் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால், யார் ஊழல் கட்சி, யாருக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்து, எது 2ஜி, சர்க்காரியா கமிஷன் என்றால் என்ன என அனைத்தையும் விவாதிப்போம். உங்கள் அட்டர்னி ஜெனரல்களை எல்லாம் கூட்டுங்கள். இன்றும், இரண்டு நாளோ அல்லது மூன்று நாளோ, எடுத்துக் கொள்ளுங்கள். இந்தியாவில் இருக்கும் பத்திரிகையாளர்களை எல்லாம் அழையுங்கள். தி.மு.க சார்பாக, இந்த ஆ.ராசா வருகிறேன். கோட்டையிலே கூட்டத்தைக் கூட்டுங்கள். யார் ஊழல்வாதி என்று நேருக்கு நேர் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்” என்றார்.

இந்நிலையில், இதைக் குறிப்பிட்டு பேசிய மு.க.ஸ்டாலின், இரண்டு நாட்கள் கழிந்துவிட்டன. இன்னும் எந்த சத்தத்தையும் காணோமே. ஆண்மையிருந்தால், விவாதத்துக்கு வர வேண்டியதுதானே என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் குறிப்பிட்டுக் கேள்வி எழுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ள நிலையில் பிரபல பத்திரிகையாளர் சுமத் சி ராமன் இது குறித்து கூறுகையில்,

முதல்வர் பழனிசாமி இந்த சவாலை ஏற்க வேண்டும், இந்த விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும், இதில் மற்றவர்கள் பங்குபெற வேண்டாம், முதல்வர் பழனிசாமி மற்றும் முக ஸ்டாலின் இருவருக்கும் விவாதம் நடக்க வேண்டும், அ.ராசா முதல்வர் வேட்பாளர் கிடையாது ஆகையால் அவருடன் எதற்கு முதல்வர் விவாதம் நடத்த வேண்டும் என்றும், மேலும் முதல்வர் வேட்பாளர்களிடையே விவாதத்தை பரிந்துரைப்பதில் என்ன தவறு? மாநிலத்துடன் தொடர்புடைய அனைத்து பிரச்சினைகளிலும் விவாதமாக இருக்க முடியும். அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் விவாதங்களைப் போல தேர்தல்களுக்கு முன்னதாக 2 மாதங்களுக்கு மேல் 2-3 விவாதங்கள் நடத்தலாம் என சுமந் சி ராமன் யோசனை தெரிவித்துள்ளார்.