அண்ணாமலை குறித்து முதல்வருக்கு சென்ற முக்கிய ரிப்போர்ட்… அதிர்ச்சியில் முதல்வர் குடும்பம்…

0
Follow on Google News

வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி தமிழகம் முழுவதும் சுமார் ஒன்றரை வருடங்கள் நடைபயணம் மேற்கொண்டு பட்டி தொட்டி எங்கும் உள்ள மக்களை நேரில் சந்திக்க இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவருடைய நடைபயணம் தொடங்கும் நாள் அன்று, முதல்வர் மு க ஸ்டாலின் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் பினாமிகள் பெயரில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்கள்,

அதே போன்று திமுக அமைச்சர்கள் மற்றும் அவர்களின் பினாமிகள் பெயரில் வாங்க பட்டுள்ள சொத்து பட்டியலை இணையதளம் மூலம் வெளியிடப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதற்கான பணிகள் தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளது என்றும், இதுவரை மட்டுமே சுமார் 2 லட்சம் கோடி வரை சொத்து கணக்குகள் சேகரிக்கப்பட்டுள்ளது என சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேட்டியளித்திருந்தார்.

அதே போன்று சில வாரங்களுக்கு முன்பு பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, முதல்வர் முக ஸ்டாலின் மருமகனுக்கு சொந்தமான ஜி ஸ்கொயர் நிறுவனம் அரபு நாடுகளுக்குச் சென்று 578 கோடி ரூபாய் பணம் கொடுத்து, அரபு நாட்டில் இருக்கும் ஒரு நபருக்கு சொந்தமான கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய சொத்தை விலை கொடுத்து வாங்கியுள்ளார்கள் என அண்ணாமலை பேசினார்.

இந்த நிலையில் தொடர்ந்து திமுக அமைச்சர்கள் மற்றும் முதல்வர் குடும்பங்கள் குறித்த பல தகவல் எப்படி அண்ணாமலை கவனத்துக்கு செல்கிறது என்கிற பெரும் குழப்பத்தில் திமுக தரப்பு இருந்து வந்தது. மேலும் அண்ணாமலை ஒவ்வொரு விஷயத்தையும் புள்ளி விவரங்களுடன் பேசுவதற்கு, தகவலை யார் மூலம் பெறுகிறார் என்கிற பெரும் குழப்பத்தில் திமுக தலைமையும் அமைச்சரும் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் திமுக தலைமைக்கு இது குறித்த ரிப்போர்ட் ஓன்று சென்றுள்ளது, அதில் தமிழகத்தில் பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும். அவர்கள் தான் அண்ணாமலைக்கு திமுகவினர் குறித்த பல ரகசிய தகவல்களை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் சிலர் பாஜக ஆதரவாளர்கள் என்றும், மேலும் சிலர் ஊழலுக்கு எதிரானவர்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகவும் கடுமையாக அண்ணாமலை அரசியல் செய்து வந்தாலும், முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இதுவரை அண்ணாமலைக்கு நேரடியாக பதில் கொடுப்பதை தவிர்த்து வருகின்றனர். அதே நேரத்தில் அண்ணாமலை கேள்விகளை எளிதாகவும் அவர்களால் கடந்து செல்ல முடியவில்லை. அந்த வகையில் அமைச்சர்கள் மூலம் அல்லது திமுக முக்கிய தலைவர்கள் மூலம் அண்ணாமலைக்கு பதில் அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அப்படி பதில் கொடுக்கும் பொழுது அந்தப் பிரச்சினை மேலும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கிவிடுகிறது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் முதல்வர் குடும்பம் மற்றும் அமைச்சர் குறித்த சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது, மக்கள் மத்தியில் இது தாக்கத்தை ஏற்படுத்துமா, அல்லது அரசியலில் ஊழல் என்பது சாதாரணமப்பா என்று மக்கள் கடந்து சென்று விடுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.