திரைப்படமாகும் முக ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு…இந்த நடிகர் தான் நடிக்கிறார்… இயக்குனர் யார் தெரியுமா.?

0
Follow on Google News

பல அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக இதற்கு முன்பு வெளியாகியுள்ளது. கடந்த வருடம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கினார் இயக்குனர் ஏ எல் விஜய். இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாத் நடித்திருந்தார். தலைவி என பெயரிடப்பட்டது. ஒரு தரப்பில் ஆதரவும் சிலர் எதிர்ப்பும் இந்த படத்திற்கு தெரிவித்து இருந்தனர்.

தலைவி படம் வெளியாவதற்கு முன்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் திரைப்படம் வெளியான பின்பு ஒரு சில காட்சிகளை தவிர்த்து அந்த படத்தில் பெரிதாக சொல்லும் படி எதுவும் இல்லை. இதற்கு முக்கிய காரணம் தலைவி படத்தில் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை வரலாறு சொல்லப்படும் என்று ஆர்வத்துடன் சென்ற மக்களுக்கு அதில் பெரும்பாலும் ஜெயலலிதாவின் சினிமா வரலாறு இடம்பெற்றிருந்தது.

சில நிமிடங்கள் மட்டுமே ஜெயலலிதாவின் அரசியல் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது முதல்வர் மு க ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்குவதற்கு உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் அதற்கான வேலைகளில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகிறது. இயக்குனர் சீனு ராமசாமியை அழைத்து இந்த படத்தை இயக்குவது குறித்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் பேசியதாகவும்.

மேலும் இந்த படத்தில் மு க ஸ்டாலின் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்க இருப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுப்பதற்காக முயற்சியிலும் இறங்கியுள்ளது. இந்த படத்தை இயக்குவதற்கு இயக்குனர் வெற்றிமாறனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

முக ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு மற்றும் கருணாநிதி வாழ்க்கை வரலாறு இருவரின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் பேசி வந்தாலும், மு க ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்குவதில் தாமதம் ஆகலாம், ஆனால் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்குவதற்காக வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்று கூறப்படுவது குறிப்பிட த்தக்கது.

பணியில் இருந்தது தமிழ் பெண்… நடிகர் சித்தார்த் தில்லாலங்கடி வேலையை அம்பலப்படுத்தும் சிசிடிவி..