பெண் காவலர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக சவுக்கு சங்கர் கடந்த மே 8-ஆம் தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே சவுக்கு சங்கர் அதிமுகவின் கைக்கூலியாக செயல்பட்டு வருகிறார் என பலரும் கூறி வந்த நிலையில் அதனை உண்மையாக்கும் வகையில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல் முன்னாள் அமைச்சர்கள் வரை என பலரும் மாறி மாறி எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சவுக்கு சங்கரின் முன்னாள் அட்மினாக இருந்த பிரதீப் சமீபத்தில் அளித்த நேர்காணலில் சவுக்கு சங்கர் மற்றும் அதிமுகவின் கள்ளத்தொடர்பை திரை போட்டு காட்டியுள்ளார். அதில் அவர் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் போட்டு தற்போது கைது செய்தது போலவே அடுத்து ED ரெய்டு வரும் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளார்.
அதாவது ஒரு OFFICE ஆரம்பித்து 15 முதல் 20 பேர்களை வேலையில் அமர்த்தி மாதம் 15 லட்சம் வரை ஒரு புது சேனல் மூலமாக சம்பாதித்து எப்படி சம்பளம் கொடுக்க முடியும்? என பல கேள்விகளை அடுக்கியதோடு, சவுக்கு சங்கருக்கு பணம் கொடுப்பவர்கள் அதிமுகவை சார்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளார். மேலும், சவுக்கு சங்கரை காப்பாற்றுவதற்காக அதிமுக போராடுவதே, சவுக்கு சங்கர் மீது அமலாக்க துறை பாய்ந்தால், அதிமுகவினர் பலரும் கொத்தோடு மாட்டி சிறை செல்வார்கள் என்ற பயத்தில் தான் எனவும் கூறியுள்ளார்.
குறிப்பாக சவுக்கு சங்கரை கோவை, திருச்சி, சென்னை என எந்த சிறைக்கு மாற்றினாலும் அதிமுகவின் Advocate Team பறந்து பறந்து வேலை செய்வதே சவுக்கு சங்கர் அதிமுகவிற்கு ஆதரவாக பேசியதற்காக அல்ல, அதிமுக பற்றிய பல ரகசியங்கள் குறித்து வாய் திறக்காமல் இருப்பதற்காக தான் என பிரதீப் கூறியுள்ளார். மேலும் கொடநாடு வழக்கிலும் சவுக்கு சங்கருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற பகீர் தகவலையும் கூறியுள்ளார்.
அதேபோல் சவுக்கு சங்கரின் பின்னணியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கும் சிறை உறுதி என பாஜகவின் திருச்சி சூர்யா அவர்களும் பகீர் கிளப்பியுள்ளார். இந்நிலையில் தான் எடப்பாடிக்கும் சவுக்கு சங்கருக்கும் என்ன தொடர்பு என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் லென்ஸ் தமிழ்நாடு என்ற youtube சேனலில் மதன் ரவிச்சந்திரன் என்பவர் சவுக்கு சங்கரின் சவுக்கு மீடியாக்குள் புகுந்து ஸ்டிங் ஆப்ரேஷன் மூலம் பல ரகசிய தகவல்களையும் திரட்டி தனது youtube தளத்தில் வெளியிட்டிருந்தார்.
அதில் சவுக்கு சங்கர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவும் ஓபிஎஸ்-க்கு எதிராகவும் செயல்பட வேண்டும் என்று திட்டம் தீட்டியிருந்ததும் அம்பலமானது. மேலும் எடப்பாடி பழனிச்சாமியை மிரட்டும் வகையில் சவுக்கு சங்கர் பல்வேறு ரகசிய வீடியோக்களை வைத்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி சவுக்கு சங்கரின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டதில் ஏதோ உள்குத்து இருப்பதாக பலரும் தங்களின் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது அதிமுகவின் குடுமி சவுக்கு சங்கரின் கையில் இருப்பதும் வெட்ட வெளிச்சமாகி வருவதாக அரசியல் விமர்சகர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சவுக்கு சங்கருக்கு அதிமுக தரப்பில் இருந்து மிக பெரிய அளவில் பணம் பரிவர்த்தனை நடந்திருக்கும் என்றும், அந்த வகையில் சவுக்கு சங்கரை அமலாக்கத்துறை விசாரணை நடத்தினால் அதிமுகவில் முக்கிய புள்ளிகள் கொத்தாக சிக்கும் என கூறப்படுகிறது.