நான் கடைசி வரை மைக்ல கத்தியே சாக வேண்டுமா.? சீட் கிடைக்காத விரக்தியில் கதறி அழுத தமிழன் பிரசன்னா.!

0
Follow on Google News

2021 சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, இன்னும் வாக்கு பதிவுக்கு குறுகிய காலம் மட்டுமே உள்ள நிலையில், அணைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு என செம்ம பிசியாக இருக்கின்றனர், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் விருப்ப மனுவை பெற்று கொண்டு அவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் திமுக செய்தி தொடர்பாளராக இருந்து வருகின்றவர் தமிழன் பிரசன்னா, இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக தலைமை கழகத்தில் விருப்ப மனு வழங்கினார். விருப்ப மனு அளித்தவர்களிடம் அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் அழைத்து திமுக தலைமை நேர்காணல் நடத்தியது, இந்த நேர்காணுளுக்கு விருப்ப மனு அளித்த தமிழன் பிரசன்னா வந்த போது அறிவாலயம் வாசலில் வைத்தே உனக்கு தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு ஆசை வந்துவிட்டதா என திமுக மூத்த தலைவர் ஒருவர் செம்ம டோஸ் கொடுத்து, உன்னிடம் நேர்காணல் நடத்த நாங்க ஒன்னும் சும்மா இல்லை, உன்ன இந்த பக்கமே பார்க்க கூடாது என விரட்டி விட்டதாக அப்போது கூறப்பட்டது.

இதனை தொடர்ந்த நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை சட்டமன்ற தேர்தலில் சீட் வாங்கி போட்டியிட கடந்த இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தார் திமுக பிரசன்னா, இந்நிலையில் அறிவாலயத்தில் திமுக மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் யார் பிரசன்னாவை பார்த்தால் உனக்கு இங்க என்ன வேலை, இங்கெல்லாம் சும்மா சும்மா வரக்கூடாது, தொலைகாட்சியில் யாராவது உன்னை பேச அழைத்த போ, அல்லது கட்சி கூட்டத்தில் பேச கூப்பிட்ட பேசு என ஒவ்வொரு முறையும் பிரசன்னா துரத்தி விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசாவுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வந்த பிரசன்னா, மேடைகள் தோறும் திமுக தலைவர் முக ஸ்டாலினை புகழ்ந்து பேசுவது போன்று ஆ.ராசாவையும் புகழ்ந்து வந்தார், இதனை தொடர்ந்து ஆ.ராசா தலைவரிடம் பேசி எப்படியும் இம்முறை சட்டசபை தேர்தலில் சீட் வாங்கி தந்து விடுவார் என நம்பிக்கையில் இருந்து வந்துள்ளார் பிரசன்னா.

திருவள்ளூர் சட்டசபை தொகுதி, அல்லது கும்முடிப்பூண்டி தொகுதி என இரண்டில் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார், இதற்காக விருப்பமனு தாக்கல் செய்ய முடிவு செய்து ஆ.ராசாவை அணுகி ஆலோசனை கேட்ட போது, மற்ற தலைவர்களை பார் என மழுப்பலாக பதில் சொன்னதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆ.ராசா உறுதியாக இம்முறை தமக்கு சீட் வாங்கி தந்துவிடுவார் என நம்பிக்கையில் இருந்த பிரசன்னாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இதனை தொடர்ந்து திமுக மூத்த தலைவர்கள் இருவரை சந்தித்து தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுக்க உள்ளதாகவும், நீங்க தான் தலைவரிடம் பேசி சீட் பெற்று தரவேண்டும் என கேட்டுள்ளார், ஆனால் அவர்கள் உனக்கு என்ன மக்களிடம் செல்வாக்கு இருக்கு, தேர்தலுக்கு செலவு செய்ய உன்னிடம் பணம் இருக்க, உன்னை வரும் தேர்தலில் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தினால் விழுகிற ஓட்டும் விழாது என புகார் வந்துள்ளது.

அதனால தேர்தலில் பிரசாரத்துக்கு உன்னை பயன்படுத்துவதே சந்தேகம், இதில் சீட் எப்படி கிடைக்கும் என திட்டி பிரசன்னாவை அனுப்பி வைத்துள்ளனர், இந்நிலையில் தனக்கு நெருக்கமாக உள்ளவர்களிடம் நான் கடைசி வரை மைக்க பிடித்து கத்தி கத்தியே சாக வேண்டுமா, எனக்கும் MLA, MP என ஆசை இருக்காதா.? என கதறி அழுதுள்ளார் பிரசன்னா, அதற்கு அவருடைய நண்பர்கள் உனக்கும் ஒரு காலம் வரும் என ஆறுதல் சொல்லி பிரசன்னாவை சமாதனம் படுத்தியதாக கூறபடுகிறது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .