நடிகை வரலக்ஷ்மிக்கு இன்று பிறந்தநாள்.. சமூக வலைத்தளங்களில் குவியும் வாழ்த்துக்கள்…!

0
Follow on Google News

நடிகர் சிம்பு நடித்து வெளிவந்த “போடா போடி” என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகைதான் வரலட்சுமி. நடிகரும், அரசியல் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் மூத்த மகள் தான் இந்த வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம், கண்டம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் வரலட்சுமி சரத்குமார் நடித்து வெளிவந்த தாரை தப்பட்டை, மாரி 2, வெல்வெட் நகரம், சந்திரமௌலி, கன்னி ராசி ஓரளவு நல்ல வரவேற்ப்பை கொடுத்தாலும், இவர் வில்லியாக நடித்த சண்டக்கோழி 2, சத்தியா, நீயா போன்ற திரைப்படங்கள் அதிகமாக பேசக்கூடிய படமாக நல்ல வரவேற்ப்பை கொடுத்தது. சமீபத்தில் தெலுங்கில் ரவிதேஜா . இவர் நடித்து வெளிவந்த “கிராக்” திரைப்படத்தில் வில்லனாக சமுத்திரகனியும் அவரின் கீப்பாக ஜொயம்மாவாக (வரலட்சுமியும்) நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படமும் இவரின் வெற்றி வரிசையில் இடம் பிடித்தது. தற்போது இவரது நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் தான் “காட்டேரி”. சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பிரச்சினைகளுக்கு துணிச்சலுடன் குரல் கொடுக்கும் ஒரு பெண் கூட. இன்று இவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்த வண்ணம் உள்ளார்கள்…