பிரபாகரன் உடன் அமைக்கறி சாப்பிட்டேன்.!அண்ணாதுரைக்கு பக்கோடா வாங்கி தந்தேன்.! சீமானுடன் போட்டி போடுகிறாரா ஸ்டாலின்.?

0
Follow on Google News

மறைந்த பிரபல தலைவர்களுடன் தான் நெருக்கமாக இருப்பது போன்று கதை சொல்வதில் சீமானுடன் போட்டி போடுகிறாரா திமுக தலைவர் முக ஸ்டாலின் என்கிற கேள்வி எழுந்துள்ளது. நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மறைந்த தலைவர்கள் பற்றி கதை சொல்வது வழக்கம் அந்த வகையில் விடுதலை புலி இயக்க தலைவர் பிரபாகரன் உடன் இனைந்து எடுத்த ஒரு புகைப்படத்தை வைத்து அவர் சொன்ன கதைகள் ஏராளம், அதில் மிக பிரபலம் அடைந்த கதைகளில்.

பிரபாகரன் உடன் அமர்ந்து அமைக்கறி சமைத்து சாப்பிட்டது, அவருடன் துப்பாக்கி பயிற்சியில் எடுப்பட்து, மேலும் பிரபாகரன் மட்டுமின்றி விடுதலை புலி தலைவர் பொட்டு அம்மன் வீட்டில் இட்லிகுள் கறி சாப்பிட்டது என சீமான் கூறிய கதைகள் ஏராளம், அதே போன்று சமீபத்தில் மறைந்த பிரபல தலைவர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களுடன் நெருக்கமாக இருந்த சம்பவங்களை வெளியில் தெரிவிக்காமல், அவர்கள் மறைந்த உடன் அவர்களை பற்றி சீமான் கதை கூறுவர்.

அதில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் இலங்கையில் நடந்த கச்சேரி நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் சீமானை தொடர்பு கொண்டு தம்பி நான் இலங்கைக்கு சென்று பாட்டு பாடிவிட்டு வந்து விடுகிறேன் என தெரிவித்துவிட்டு சென்றதாக கதை சொன்ன சீமான், மேலும் மறைந்த திமுக தலைவராக இருந்த கருணாநிதி பாக்கெட்டில் இருந்த பேனாவை எடுத்து எழுதும் அளவுக்கு அவருடன் நெருக்கமாக இருந்ததாக சீமான் பேசியிருந்தார்.

இந்நிலையில் தற்போது சீமான் போன்று மறைந்த தலைவர்களை வைத்து கதை சொல்ல ஆரம்பித்து விட்டார் முக ஸ்டாலின் என்கிற குற்றசாட்டு எழுந்துள்ளது, சமீபத்தில் தொலைக்காட்சி பேட்டியில் மறைந்த முதல்வர் அண்ணாதுரைக்கு பக்கோடா வாங்குவதற்காக சுமார் மூன்று கிலோ மீட்டர் வரை சைக்கிளில் சென்று வாங்கி வந்ததாக கூறும் ஸ்டாலின் சில நேரம் மூன்று கிலோ மீட்டர் வரை நடந்தே சென்று பக்கோடா வாங்கி வந்து கொடுப்பாராம்.

மேலும் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் ஸ்டாலினிடம் நன்றாக படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கியதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார், இந்நிலையில் முக ஸ்டாலின் கதை சொல்லுவதில் சீமானுடன் போட்டி போட தொடங்கியுள்ளதாகவும், இன்னும் இது போன்ற பல கதைகளை எதிர்பார்க்கலாம் என்றும், கதை சொல்வதில் சீமான் மற்றும் ஸ்டாலின் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக மக்கள் கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.