வெடித்தது பெரும் சர்ச்சை..! நிதியமைச்சர் PTR நாவை கட்டுப்படுத்த திமுக தலைமை அதிரடி உத்தரவு..!

0
Follow on Google News

கடந்த பத்து வருடம் வனவாசத்துக்கு பின்பு கடும் போராட்டத்துக்கு பின்பு ஆட்சியை பிடித்துள்ளது திமுக. ஏற்கனவே 2006-2011 வரை நடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற அராஜகம், அடாவடி காரணமாக பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட திமுக மீது அதிருப்தி காரணமாக கடந்த 10 வருடமாக ஆட்சியை இழந்ததை தொடர்ந்து. தற்போது ஆட்சிக்கு வந்த திமுக சற்று அடக்கி வசித்து வருகின்றது. இருந்தும் ஆங்காங்கே பல்வேறு பிரச்சனைகளில் திமுக நிர்வாகிகள் சிக்கி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது திமுக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள, மூத்த அமைச்சர்களான துரைமுருகன், ஐ-பெரியசாமி, பொன்முடி போன்ற தலைவர்கள் அனைவரும் பக்குவமாக பொறுப்புடன் நடந்து அவர்கள் துரை சார்ந்த வேலைகளில் மட்டும் ஈடுபட்டு வருவதால், மீடியா வெளிச்சம் இவர்கள் மீது படாமல் இருந்து வருகிறது. ஆனால் வெளிநாடுகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கத்திய வாழ்கை வாழ்ந்து கடந்த 2016ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்து அடுத்த 5 வருடத்தில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

தேவையின்றி ஈஷா யோக மய்யம் இயக்குனர் ஜாக்கி வாசுதேவ் அவர்களை வம்புக்கு இழுத்து பின் திரைமறைவில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை, அவர் விவகாரத்தில் இருந்து பின் வாங்கினார் பழனிவேல் ராஜன். தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்களான, பாஜக மூத்த தலைவர்கள், H..ராஜா, முன்னாள் அமைச்சர் மஃப பாண்டியராஜன், மற்றும் பத்திரிகையாளர் சுமந்த் சி ராமன் ஆகியோரை ஒருமையில் அநாகரிகமாக பேசி கடும் எதிர்ப்பை பெற்றார்.

இந்நிலையில் ஒரு மாநிலத்தில் நிதியமைச்சராக பத்திரிகையாளர் சந்திப்பின் போது பொறுப்புடன் பதில் சொல்ல வேண்டிய பழனிவேல் தியாகராஜன், திமுக தேர்தல் வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவீர்கள் என பத்திரிகையாளர் கேள்விக்கு எப்போது என தேர்தல் வாக்குறுதியில் தேதி போட்டார்களா.? என திமிராக பதிலளித்தது, திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் மக்கள் மத்தியில் ஆளும் கட்சி மீது தங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்கிற எதிர்ப்பு கிளம்பியது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட தேனி மாவட்ட விவசாயிகளை திருடர்கள் என்றும், தொடர்ந்து அரசு ஊழியர்களை நிதியமைச்சர் வசை பாடியது ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது திமுக தலைமைக்கு , முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாவை கட்டுப்படுத்த வேண்டும் என திமுக தலைமை அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.